ஏன் வாயினால் சுவாசிக்காது... மூக்கினால் சுவாசிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.?!
why breath way nose
பொதுவாக அனைவரும் மூக்கினால் தான் சுவாசித்து வருகின்றனர். ஆனால், ஜலதோஷமோ அல்லது வேறு பிரச்சனையாலோ மூக்கடைப்பு ஏற்பட்டிருக்கும் போது நாம் வாயால் தான் சுவாசிக்கிறோம்.
ஏன் வாயினால் சுவாசிக்காது... மூக்கினால் சுவாசிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.?!
மூக்கினாலும், வாயினாலும் உள் எடுக்கப்படும் காற்று நுரையீரலை அடைய முடியும். எனினும், வாயினால் அன்றி மூக்கின் வழியாக உட்சுவாசிப்பது உடல்நலத்திற்கு ஏற்றது.
மூக்கினால் உட்சுவாசிக்கும் பொழுது மூக்கினுள் உள்ள மயிர்கள் தூசிகளைத் தடுப்பதுடன், மூக்கின் உட்சுரக்கப்படும் சீதம் காற்றில் உள்ள தூசுளை உட்செல்ல விடாமல் தடுக்கிறது.
மூக்கின் வழியாக காற்று செல்லும் பொழுது, உடல் வெப்பநிலைக்குக் கொண்டு வரப்படுகிறது. அத்துடன் மூக்கு மணத்தை அறியும் அங்கமாகவும் இருப்பதால் அசுத்தமான காற்றை உட்சுவாசிக்காமல் இருக்க இது உதவும்.