சாப்பிடும் பொழுது சிரித்தால் புரையேறுவது ஏன்.?! அதிக உணவு உண்டதும் இப்படி படுத்திருப்பது நல்லது ஏன்?! - Seithipunal
Seithipunal


சாப்பிடும் பொழுது சிரித்தால் புரையேறுவது ஏன்?

நாம் உண்ணும் உணவு வாய்க்குழியில் இருந்து களத்தினூடாக இரைப்பைக்குள் செல்லும். உள்மூச்சின் போது காற்று வாய்க்குழியில் சென்று வாதனாளி ஊடாகச் செல்லும். களத்தின் முன்னால் வாதனாளி இருப்பதால் உணவு விழுங்கப்படும் பொழுது வாதனாளி மூச்சுக்குழல் வாய் மூடியால் மூடப்படும். சிரிக்கும் பொழுது வெளிவரும் வெளிமூச்சு, மூச்சுக்குழல் வாய் மூடியைத் திறப்பதால், உணவு அதனுள் செல்வதால் சாப்பிடும் பொழுது சிரித்தால் புரையேறுகிறது.

அதிக உணவு உண்டவுடன் இடது பக்கம் சரிந்து படுத்திருப்பது நல்லது ஏன்?

நமது உடலில் வயிற்று அறையின் இடது பக்கத்தில் இரைப்பை உள்ளது. உணவு உண்ட பின் இரைப்பையில் நிறைய உணவு இருப்பதால் வலது பக்கம் திரும்பிப்படுத்தால் இரைப்பை, மற்ற அங்கங்களை அழுத்துவதால் வசதியில்லாமல் இருக்கும். இடது பக்கமாகச் சரிந்து படுத்திருந்தால் இரைப்பை மற்ற அங்கங்களை அழுத்தாது. இதனால் அவ்வாறு படுத்திருப்பது வசதியாய் இருக்கும்.

சைக்கிள் அச்சினுள் குண்டுகள் வைக்கப்பட்டிருத்தல் ஏன்?

சைக்கிள் அச்சினுள் உராய்வு குறைக்கப்படாவிடின் ஓடுவது கஷ்டமாய் இருப்பதுடன், ஓடும் பொழுது சத்தம் கேட்கும். அத்துடன் உராய்வினால் விரைவில் அச்சு தேய்ந்துவிடும். இதை தவிர்ப்பதற்காகவே அச்சினுள் சிறு குண்டுகள் வைக்கப்படும். 

குண்டுகள் வைக்கப்படும் அமைப்பு குண்டுப்போதிகை எனப்படும். குண்டுக்குப் பதிலாக உருளைகள் வைக்கப்படும் அமைப்பு உருளிப்போதிகை ஆகும். இது பெரிய வாகனங்களில் பயன்படுத்தப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

while eat food after lying


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal