வேர்க்கடலை உடல் எடை குறைக்க உதவுமா.?! தெரிந்து கொள்ளுங்கள்.! - Seithipunal
Seithipunal


வேர்க்கடலையில் உடலுக்கு  தேவையான எல்லா விதமான சத்துக்களும் சம அளவில் நிறைந்து இருக்கின்றன. வேர்க்கடலையானது உடலுக்கு சிறந்த புரதத்தின் மூலக்கூராக விளங்குகிறது. 

மேலும் இவற்றில் உடலுக்கு தேவையான விட்டமின்களும், விட்டமின் பி காம்ப்ளக்ஸும், நார்ச்சத்துக்களும், கார்போ ஹைட்ரேட்டுகளும் நிறைந்துள்ளது. இவற்றை நம் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று பார்ப்போம் .

வேர்க்கடலையில், இருக்கக்கூடிய ப்ரோட்டின், நார் சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நம் உடலின் கெட்ட கொழுப்புக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்துகின்றன. இதனால் தொடர்ந்து வேர்க்கடலை எடுத்து வருபவர்களுக்கு இதய நோய் பாதிப்பானது குறைவான அளவிலேயே இருக்கிறது.

வேர்க்கடலையானது புரோட்டீன்களின்  பிறப்பிடமாகும், புரோட்டீன் நம் உடல் தசைகளை வலுப்படுத்துவதற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வைக்கிறது.

இதன் காரணமாக இவை எடை குறைப்பில் முக்கிய பங்கு வைக்கின்றன. வேர்க்கடலையில் இருக்கின்ற வைட்டமின் பி1, நையாசின், ஃபோலேட் போன்ற சத்துக்கள்  நம் மூளையின் செயல்பாட்டை அதிகரித்து அவற்றை எப்பொழுதும் சுறுசுறுப்புடன் வைக்கின்றது.

வேர்க்கடலையில் மாங்கனிசை மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளதால் நம் உடலின் எலும்புகள் வலுப்பெறுவதற்கு உதவுகின்றன. வேர்க்கடலையில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நம் உடலை புற ஊதா கதிர்களிடமிருந்து பாதுகாக்கிறது.

இந்த வேர்க்கடலையை பசி எடுக்கும் போது சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான எனர்ஜி கிடைத்து விடுவதால் அதிகப்படியாக சாப்பிடுவதை தவிர்க்க உதவும். எனவே, இதன் மூலம் உடல் எடையை நாம் கட்டுப்படுத்தலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Verkadailai special benefits for weight loss


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->