விளக்கெண்ணைய இவ்வளவு சாதாரணமா நினைச்சிட்டோமே? தலைமுடி அடர்த்தியாக வளர இதோ சில டிப்ஸ்! - Seithipunal
Seithipunal


விளக்கெண்ணெய் நம் கூந்தல் ஆரோக்கியத்திற்கு  நன்மை தரக்கூடிய மிகச்சிறந்த பொருளாகும். ஆமணக்கு விதைகளில் இருந்து எடுக்கக்கூடிய இந்த எண்ணெய்  உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து  நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இதன் காரணமாக முடி உதிர்வது குறைந்து  கூந்தலின் வளர்ச்சி அதிகரிக்கும். விளக்கெண்ணையை பிற எண்ணெய்களுடன் சேர்த்து பயன்படுத்துவது  கூந்தலின் ஆரோக்கியத்திற்கு  ஏராளமான நன்மைகளை கொடுக்கிறது. நம் கூந்தல் உதிர்வதை தடுத்து கருமையாகவும் செழிப்பாகவும் வளர  விளக்கெண்ணெய் எவ்வாறு பயன்படுத்தலாம் என பார்ப்போம்.

விளக்கெண்ணையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்த கூந்தல் ஆரோக்கியம் மேம்படும். இது கூந்தல் அடர்த்தியாகவும்  கருமையாகவும் வளர  உதவி புரிவதோடு கூந்தல் உடைவதையும் தடுக்கிறது. தேங்காய் எண்ணெயை ஒரு டீஸ்பூன் எடுத்து லேசாக சூடாக்கவும் அதனுடன் ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து லேசாக சூடாக்கிய பின் இந்தக் கலவையை தலை முடியில் தேய்த்து 20 நிமிடம் மசாஜ் செய்யவும் முடிக்கு ஸ்கீம் செய்யலாம் அல்லது  சூடான துண்டை பயன்படுத்தி  தலை முடியை 20 நிமிடம்  கவர் செய்து  அதன் பிறகு முடியை அலசவும்.

கிளிசரின் பல அழகு நன்மைகளைக் கொண்டுள்ளது. இதனை  விளக்கெண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தல்  ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை  தருகிறது. விளக்கெண்ணெய் மற்றும் கிளிசரின்  இவை இரண்டும்அதிக அடர்த்தி தன்மை கொண்டிருப்பதால் இவற்றுடன் தேங்காய் எண்ணெயும் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை  லேசாக சூடாக்கி  அதனுடன் அரை டீஸ்பூன் கிளிசரின்  மற்றும் ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து இளஞ்சூட்டில் எடுத்து நம் தலை முடி முழுவதும் நன்றாக  தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அரை மணி நேரம் ஊற வைத்து  நல்ல ஷாம்பூ அல்லது கண்டிஷனர் பயன்படுத்தி  தலை முடியை கழுவிக் கொள்ளலாம்.

பாதாம் எண்ணெயில் ஏராளமான  ஊட்டச்சத்துக்கள் உள்ளன  இவற்றை விளக்கெண்ணெயுடன் கலந்து பயன்படுத்தும் போது முடி உதிர்தல்  இளநரை ஒன்றரை பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. பாதாம் எண்ணெய் 8 முதல் 10 சொட்டு எடுத்து  அதனுடன் ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய்  மற்றும் இரண்டு சொட்டு வேப்ப எண்ணெய்  கலந்து  தலைமுடியில் நன்றாக தடவி  சர்குலர் மோசனில் மசாஜ் செய்ய வேண்டும்  சிறிது நேரம் நன்றாக ஊற வைத்துவிட்டு  மென்மையான ஷாம்பூ பயன்படுத்தி தலைமுடியை கழுவிக்கொள்ளலாம். இது கூந்தலுக்கு பளபளப்பை தருவதோடு  அதன் அடர்த்தி மற்றும் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இளநரை போன்ற பிரச்சினைகளில் இருந்தும் நம் கூந்தலை பாதுகாக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

to protect hair loss use castor oil in these methods


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->