தினமும் ''செவ்வாழை'' சாப்பிடுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள்..! - Seithipunal
Seithipunal


உணவு சாப்பிட பிறகு சாப்பிட வேண்டியது வாழைப்பழம். இதில் ஏராளமான வகைகள் உள்ளது. இருப்பினும் செவ்வாழை பழத்திற்கு தனி சிறப்பு உள்ளது. 

இதில் அதிக அளவிலான உயிர்ச்சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம் போன்றவை உள்ளது. செவ்வாழை சாப்பிடுவதால் மாலை கண் நோய், மலட்டு தன்மை போன்ற பிரச்சனை சரியாகிவிடும். 

மூளை செயல்பாடு, இதய செயல்பாடு, கல்லீரல், குடல் இயக்கம் போன்றவற்றை சரி செய்யும். இந்த பழத்தில் பொட்டாசியம் உள்ளதால் சிறுநீரகங்களில் கற்கள் வராமல் தடுக்கும். ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கும். 

ரத்தசோகை இருப்பவர்கள் தினமும் இரண்டு செவ்வாழை சாப்பிடுவதால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் ஒரு மாதம் தொடர்ந்து செவ்வாழை சாப்பிடுவதால் குணமடையும். 

ஆண்களுக்கு நரம்பு தளர்ச்சி வருவதால் உடல் பலம் குறையும். இதனால் ஆண்மை குறைவு ஏற்படும். இதனை தடுப்பதற்கு 48 நாட்கள் தினமும் காலை மாலை செவ்வாழை சாப்பிடுவதால் ஆண்மை தன்மை அதிகரிக்கும். 

40 நாட்கள் தொடர்ந்து இரவில் செவ்வாழை பழம் சாப்பிட்டு பிறகு தேன் சாப்பிடுவதால் கருவுற வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த செவ்வாழை பழத்தை சரியான நேரத்தில் சாப்பிடுவதால் சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு கிடைக்கும். அது போல் செவ்வாழையை காலை 6 மணி அளவில் காலை உணவுக்குப் பிறகு மற்றும் மாலை 4 மணி அளவில் சாப்பிடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Red banana benefits 


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->