தும்மல் வருவதற்கு இது தான் காரணமாம்!! தும்மல் வரும்போது, நிறுத்தினால் இவ்வளவு பிரச்சனையா? - Seithipunal
Seithipunal


தும்மல் யாருக்குமே எப்பொழுதும் தும்மல் வந்து கொண்டிருப்பதில்லை. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தும்மல் வருகின்றது. ஒரு பழைய துணியை எடுத்து உதறினால், அதில் இருக்கும் தூசுக்கள் மூக்கின் வழியாக உள்ளே செல்லும்பொழுது தும்மல் வரும் அல்லது சாலையில் நடக்கும்பொழுது யாராவது நம் மீது புகையை அல்லது புழுதியை கக்கும் போது வரும்.

வீட்டில் அடுப்பில் மிளகாய் போன்ற காரமான பொருட்களை வேகவைக்கும்பொழுது காரம் மூக்கின் வழியாக நுழையும்பொழுது தும்மல் வரும். மூக்கின் வழியாக நுரையீரலுக்குள் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் தூசுக்கள், வெப்பம், காரம், கிருமிகள் நுழையும்பொழுது நம் நுரையீரல் பயப்படும். 

உடனே, நுரையீரல் நம் உடலில் உள்ள ஒரு மருத்துவரிடம் எனக்குள்ளே ஒரு நாற்பது தூசுகள் வந்து விட்டன. இதனால் எனக்கு ஆபத்து, அதை வெளியேற்ற வேண்டும் என்று கேட்கும். நமது உடலில் உள்ள மருத்துவர் உடனே தும்மல் சுரப்பி என்ற ஹிடமைன் என்ற சுரப்பியிடம் அந்த வேலையை கொடுப்பார்.

தும்மல் சுரப்பி நுரையீரலுக்குச் சென்று ஆராய்ச்சி செய்து தும்மலுக்கு தேவையான சத்தியை உடலிலிருந்து பெற்று காற்று தேவையான அளவு எடுத்து தும்மல் வரும்பொழுது அதில் நீர்த்துளிகள் வெளியேறும்.

எனவே உடலில் உள்ள தும்மலுக்கு தேவையான நீரை உறிஞ்சி நமக்கு தெரியாமல் நம்மையும் மீறி நான்கு முறை காற்றுடன் தண்ணீரைக்கொண்டு அந்த நாற்பது தூசிகளையும் வேகமாக நுரையீரலிலிருந்து வெளியேற்றும் ஒரு அற்புதமான கழிவு நீக்கம் என்ற வேலைதான் தும்மல். 

இதனால், தும்மல் வருகையில் அதனை தடுத்து நம் உடலில் கழிவுகளை நிறுத்தி வைத்து மிகப்பெரிய நோய் தொற்றுக்கு ஆளாகாமல் தும்மி விடுவது உடலுக்கு நல்லது.

English Summary

reason for sternutation


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal