கர்ப்பிணி பெண்கள் உறங்கும் சமயத்தில் இவ்வாறு படுத்து உறங்குங்கள்.! குழந்தை எந்த விதமான பிரச்சனையும் இன்றி தாயின் வயிற்றில் விளையாடட்டும்.!!  - Seithipunal
Seithipunal


இன்றைய காலத்தில் பெண்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும்., தனி நபர் தனது ஆரோக்கியத்தை இயற்கையான முறையில் மேம்படுத்தவும் என்று ஒவ்வொரு விஷயத்திற்கும் உள்ள ஆராய்ந்து சொல்ல கூடிய அறிவியல் விளக்கத்தை., அன்றே தமிழன் கூடுவிட்டு சென்றுவிட்டான். 

இந்த விஷயத்தை இன்றுள்ள மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மருத்துவ முறையில் கூறி வருகின்றனர். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் உள்ளது. அவற்றில் முக்கியமானது தூங்கும் முறையாகும். 

பெண்கள் பெரும்பாலும் தூங்கும் போது அவர்களின் வசதிக்கேற்ப மல்லாந்தும்., பக்கவாட்டு முறையில் படுத்தும் உறங்குவது வழக்கம்., இந்த பழக்கமானது தொடரும் பட்சத்தில் கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சூழ்நிலையின் காரணமாக சில அவதிகளுக்கும் உள்ளாக நேரிடுகிறது. 

கர்ப்பமான முதல் மூன்று மாதங்களை பொறுத்த வரையில் எந்த விதமான முறை உறக்கமும் பிரச்சனை இல்லை., இந்த சமயத்தில் அவ்வப்போது மல்லாந்து உறங்குவது பிரச்சனை இல்லை., ஆனால் நான்காம் மாதத்தின் துவக்கத்தில் தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான தொப்புள் கொண்டியானது வலிமை பெற துவங்கியிருக்கும். 

குழந்தைகள் பிறக்கும் நேரத்தில் கொடி சுற்றியுள்ளது., கொடி சுற்றிய நிலையில் குழந்தை பிறந்துள்ளது என்று கூறியதை அறிந்திருப்போம். குழந்தையை வயிற்றில் சுமக்கும் தாய் மல்லாந்து உறங்கும் பட்சத்தில்., கருப்பையில் இருக்கும் குழந்தையானது தொப்புள் கொடியால் சுற்றிக்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.

இந்த சமயத்தில் தாயின் இரத்த ஓட்டமானது சீராக இயங்காமல் இருப்பதற்கு., குழந்தையின் எடை அதிகரிக்கும் சமயத்தில் தாய் வானத்தை பார்த்தார் போல் படுத்திருக்கும் பட்சத்தில்., தாயின் இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் இருக்கும் எலும்புகளில் அழுத்தம் ஏற்படும்., இதன் விளைவாகவே இரத்த ஓட்டம் சீராக இருக்காது. 

குழந்தையை வயிற்றில் சுமக்கும் தாய் பக்கவாட்டில் படுத்து உறங்கும் சமயத்தில் குழந்தை அசைந்து விளையாடும்., தாய் நடக்கும் சமயத்தில் குழந்தை அசைவின்றி இருக்கும். பக்கவாட்டில் உறங்கும் சமயத்தில் குழந்தை விளையாடுவதற்கு அதிகளவு இடம் இருக்கும் என்பதால் பக்கவாட்டில் படுத்து உறங்கினால் நல்லது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pregnant ladies should sleep this position to health of child


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->