சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு || கண்ணீருடன் தனது இறுதி ஆட்டத்தை முடித்துக்கொண்ட ராஸ் டெய்லர்.! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து அணி வீரர் ராஸ் டெய்லர் இன்றுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

2006 முதல் நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் ராஸ் டெய்லர் (37 வயது) 112 டெஸ்டுகள், 236 ஒருநாள், 102 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

இதில், டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையையும் ராஸ் டெய்லர் பெற்றுள்ளார். மேலும், அதிக ஒருநாள் சதம், அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக சதம் எடுத்த நியூசிலாந்து வீரரும் டெய்லர் தான். 

டெஸ்ட் ஆட்டங்களில் 19 சதங்கள், 35 அரை சதங்களுடன் 7683 ரன்கள் எடுத்துள்ளார். 

இந்நிலையில் தனது கடைசி ஒருநாள் ஆட்டத்தை இன்று விளையாடி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ராஸ் டெய்லர் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த நவம்பர் 2020-க்குப் பின் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவர் ஆடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Zealand Ross Taylor is about to play his final international game


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->