பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நிலைகள்.! நான்கு நிலையில் எந்த நிலை சிறந்தது?., பாதுகாப்பானது?.!!  - Seithipunal
Seithipunal


குழந்தைகள் பிறந்தவுடன் குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு உள்ள பெரிய பிரச்சனையாக பால் கொடுக்கும் பிரச்சனை உள்ளது. இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு சரியான முறையில் தாய்ப்பால் வழங்குவது அவசியம். சரியான முறையில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்காத பட்சத்தில்., தாயின் மார்பகத்தில் பால் கட்டியாக மாறும் பிரச்சனையும்., பாலின் சுரப்பு தன்மை குறையும் ஆபத்தும் உள்ளது. 

புதியதாக பிறந்த குழந்தையின் வளர்ச்சிக்கு சுமார் ஆறு மாதங்கள் வரை குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெரும் பங்கை தாய்ப்பால் பெறுகிறது. குழந்தைக்கு பால் கொடுக்கும் சமயத்தில் குழந்தையின் தலை மற்றும் உடல் பகுதி நேராக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். குழந்தையின் தலைப்பகுதியானது மார்பகத்திற்கு நேராக இருக்குமாறும்., மார்பகங்களும் நேராக இருக்குமாறும் பார்த்து கொள்ள வேண்டும். 

தாயின் மார்பக காம்புகளானது முகத்திற்கு எதிர் புறத்தில் இருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டும்., இதற்கு அடுத்தபடியக குழந்தையின் வாய் மேல்புறம் மார்பக காம்பிற்கு அருகில் இருத்தல் வேண்டும்., இந்த செயலானது முதலில் குழந்தைக்கும் தாயாருக்கும் கடினமாக இருந்தாலும்., பின்னர் சரியாகிவிடும். தாயின் உடலோடு குழந்தை நெருக்கத்தில் இருக்கும் பட்சத்தில்., இதன் மூலமாக அதிகளவு தாய்ப்பாலானது சுரக்கும். 

குழந்தையின் உடல் அனைத்தையும் தாயாரின் கையானது தங்கியிருக்க வேண்டும். இதற்கு அடுத்தபடியாக தாய் குழந்தைக்கு பால் கொடுக்கும் முறையில் நான்கு நிலைகள் உள்ளன. முதலாவதாக தொட்டில் நிலை., இடைப்பட்ட நிலை., பிடிப்பு மற்றும் பக்கவாட்டு நிலை., குறுக்காக குழந்தையை பிடித்து பால் கொடுப்பது என்று உள்ளது. 

இதில் முதல் நிலையாக குழந்தைக்கு பாலூட்டும் சமயத்தில் முழங்கையின் மேல குழந்தையை படுக்க வைத்து பால் கொடுப்பது தொட்டில் நிலை என்றும்., குழந்தைக்கு பால் கொடுக்கும் சமயத்தில் குழந்தையை கையில் வைத்து பால் கொடுக்கும் சமயத்தில் தலையை பிடித்து ஆதரவு அளித்து பால் கொடுப்பது இடைப்பட்ட நிலை என்றும் அழைக்கப்படுகிறது. 

மூன்றாவதாக உள்ள பிடிப்பு நிலையை பொறுத்த வரையில்., பால் குடிக்கும் போது குழந்தையின் உடலை தாயாரின் உடலில் இருந்து சிறிது தொலைவில் தள்ளிவைத்து பால் கொடுப்பது பிடிப்பு நிலை என்றும்., தாயும் குழந்தையும் படுத்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் குழந்தைக்கு பாலை படுத்துக்கொண்டு வழங்குவது பக்கவாட்டு நிலை என்றும் அழைக்கப்படுகிறது. 

இந்த பக்கவாட்டு நிலையில் குழந்தை கழுத்து பகுதியானது ஒரு புறமாக சாய்ந்து., குழந்தை பாலை உறிஞ்சுவதற்கு சிரமம் அடையும்., இதன் காரணமாக குழந்தைக்கு கழுத்து வலி ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும்., படுத்த நிலையில் பால் கொடுக்கும் சமயத்தில் தாயும் குழந்தையும் உறங்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். இதனால் பால் குழந்தையின் மூச்சுக்குழல் பகுதிக்கு செல்லவும் வாய்ப்புள்ளது. குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு தொட்டில் நிலையே சிறந்த நிலையாகும். இது சில பெண்களுக்கு என்னதான் வலியாக தோன்றினாலும்., குழந்தையின் எதிர்கால வாழ்க்கை முதலில் பருகும் ஆரோக்கியமான தாய்ப்பாலில் தான் குழந்தையின் ஆரோக்கியமான எதிர்கால வாழ்க்கை அடங்கியுள்ளது என்பது நிதர்சனமான உண்மை..  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to feed milk to mother and new born babies


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->