வாய் துர்நாற்றம், பற்களின் மஞ்சள் கறை: ஈஸியா எப்படி நீக்கலாம்..? - Seithipunal
Seithipunal


ஒருவர் தன்னுடைய முக அழகை பராமரிப்பது போல நம்மை அழகாக காட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும்பற்களின் அழகு , ஆரோக்கியம் பற்றி பெரிதாக கண்டுக்கொள்வதில்லை. பற்களை குழந்தை பருவத்தில் இருந்தே மிகவும் கவனமாக பாதுகாத்து பராமரித்து வரவேண்டும்.

நாம் உண்ணும் உணவினை நன்கு மென்று அதனை எளிதாக ஜீரணிக்க உதவுகிறது பற்கள்தான். மற்றவர் முன் பேசும் போது முகத்தில் சிரிப்பை கொண்டு வந்து பேசுவதும் முக்கியமான ஒன்று. பற்களில் மஞ்சள் கரை, சொத்தை இருந்தாலோ அல்லது துர்நாற்றம் அடித்தாலும் மற்றவர்கள் முன் பேசுவதற்கும், வாயை திறப்பதற்குமே அச்சம் கொள்ளவேண்டி வரும்.

இதனை தவிர்க்க எளிய முறைகளை எவ்வாறு கடைபிடிக்கலாம் என்பதை இந்த பதிவில் கீழ் காணலாம்.

பல் துலக்கும் போது எலுமிச்சை சாறோடு சிறிது உப்பு சேர்த்து கறைபட்ட இடத்தில் தேய்த்து வாய் கொப்பளிக்க பற்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதோடு, கரை மற்றும் துர்நாற்றம் நீங்கும்.

நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் திரிபலா சூரணத்தைக் கொண்டு பல் துலக்கினாலும் மஞ்சள் கறை நீங்கும்.

ஆயில் ஃபுல்லிங் செய்வது, அதாவது காலையில் நல்லெண்ணெய் கொண்டு வாய் கொப்பளிப்பது சிறந்த பலன் தரும்.

சாப்பிட்டு முடித்ததும் ‘மவுத் பிரஷ்’ பயன்படுத்துவது, கறையை நீக்கும். 

உப்பு சேர்த்த நீரில் வாய் கொப்பளித்தாலும் கறை நீங்கும்.

ஆரஞ்சுப் பழத்தோல், எலுமிச்சை தோல், உப்பு சேர்த்து துலக்க பஞ்சம் கறை படிப்படியாக குறையும். வாய் துர்நாற்றமும் நீங்கும்.

ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, வைட்டமின் சி சத்துள்ளதால் பழங்கள் இதனை பற்கள் மீது தேய்ப்பதால் பற்களின் கறை நீங்கிடும்.

கேரட், பாதாம் சாப்பிட்டால் பற்களின் கறைகள் மட்டுமல்லாது பல்லிருக்கில் சேரும் உணவுத் துணுக்குகளையும் நீக்கும்.

கொய்யா தினமும் சாப்பிடலாம். அத்தோடு, கொய்யா இலையை வாயில் போட்டு சிறிது நேரம் மென்று துப்பினால் கறை நாளடைவில் நீங்க வாய்ப்பிருக்கிறது.

கற்றாழை ஜெல்லை பற்களில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் தினமும் 2 முறை கழுவி வந்தாலும் கறைகள் படியாது.

ஒரு ஸ்பூன் கிராம்பு பொடியில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து பற்களில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் 02 முறை செய்து வந்தால் கறைகள் நீங்கும். வாய் துர்நாற்றம் தடுக்கப்படும்.

02 துளிகள் ரோஸ்மேரி ஆயிலை 01 ஸ்பூன் நீரில் கலந்து வாயில் ஊற்றி 10 நிமிடம் கொப்பளித்து துப்பினால் பற் கறைகள், வாய் துர்நாற்றம் நீங்கும்.

நன்றி : இணையம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How to easily remove bad breath and yellow stains from teeth


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->