கொழுப்பு கட்டிகள் குறைவதற்கு என்ன செய்யலாம்?.! இயற்கை வைத்தியம்.!!
how to cure Lipoma by naturally
இன்றளவில் உள்ள சிலருக்கு உடலில் ஆங்காங்கே கொழுப்பு கட்டிகளானது ஏற்பட்டு இருக்கும். இந்த கட்டிகளை லிபோமா என்றும் அழைப்பார்கள். உடலின் கொழுப்பு திசுக்களில் உட்பகுதியில் ஏற்படும் வளர்ச்சி அதிகரிக்கும் நிலையின் காரணமாக இது ஏற்படுகிறது. இது புற்றுநோய்க்கட்டிகள் கிடையாது. இந்த கொழுப்பு கட்டிகளானது கழுத்து., அக்குள்., தொடை மற்றும் மேற்புற கைகளின் பகுதியில் ஏற்படும்.
சில நபர்களுக்கு இக்கட்டிகள் எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் தோன்றும்.. இந்த கட்டிகளின் வளர்ச்சிக்கு சரியான காரணங்கள் கண்டறியப்படாத நிலையில்., நமது மரபணுக்கள் மற்றும் உடலின் பருமனை பொறுத்து வளர வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. இந்த கட்டிகள் எந்த விதமான வலியையும் ஏற்படுத்தாது என்றாலும்., பொறுமையாக வளரும் தன்மையை கொண்டது.

இக்கட்டிகளை நீக்குவதற்கு அறுவை சிகிச்சை முறைகள் அல்லது லேசர் சிகிச்சைகள் மூலமாக அகற்ற இயலும். மருத்துவரின் ஆலோசனைப்படி இக்கட்டிகளை அகற்றினாலும்., மீண்டும் ஏற்படாது என்பது உறுதியாக கூற இயலாது. இக்கொழுப்பு கட்டிகளை கரைக்க இயற்கை வழிமுறைகள் உள்ளது. இது குறித்து நாம் இனி காண்போம்.
ஆரஞ்சு பழத்தில் இருக்கும் கணக்கற்ற வைட்டமின் காரணமாகவும்., அமிலத்தன்மை காரணமாகவும்., உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை பாதுகாக்கிறது. கொழுப்பு கட்டிகள் உள்ள நபர்கள் தினமும் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால்., கட்டிகள் விரைவில் குறையும். மேலும்., ஆரஞ்சு பழத்தை விதைகள் உள்ள பழங்களாக தேர்வு செய்வது நல்லது.

பருத்தி துணியை எடுத்து கொண்டு சிறிதளவு கல் உப்பினை போட்டுகொண்டு., நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயில் உப்பை முடிந்து ஊற வைத்த பின்னர்., தோசைக்கல்லை சூடாக்கி உடல் தாங்கும் அளவிற்கு சூடு எரிய பின்னர்., கொழுப்பு கட்டிகளின் மீது ஒத்தனம் வைக்க வேண்டும். சிறந்த மூலிகையான கொடிவேலியையும் பயன்படுத்தலாம்.
கொடிவேலி மூலிகையானது சித்த மருத்துவ கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. உடலில் உள்ள கொழுப்பு கட்டிகளின் மீது கொடிவேலி மூலிகைகளை தேய்த்து வந்தால்., கொழுப்பு கட்டிகளானது விரைவில் குறையும். இதுமட்டுமல்லாது வாரத்திற்கு ஒரு நாள் ஒரு வேலை சாப்பிடாமல் விரதம் இருத்தல்., கொழுப்பு கட்டிகள் குறைய சிறந்த வழியாகும்.
Tamil online news Today News in Tamil
English Summary
how to cure Lipoma by naturally