"மாம்பழம் சாப்பிட ஆசையா இருக்கா?, ஆனா சுகர் இருக்கேன்னு பயமா".? அப்போ இது உங்களுக்குதான்.! - Seithipunal
Seithipunal


கோடை காலம் என்றாலே மாம்பழ சீசனுகாக காத்திருப்பவர்கள் ஏராளம்.
சிறுவர் முதல் பெரியவர் வரை பாரபட்சமின்றி பிடிக்கும். நீரழிவு நோயுள்ளவர்கள் மாம்பழத்தை சாப்பிடலாமா? வேண்டாமா என்ற கேள்வியுடன் தான் உண்பார்கள்.

மாம்பழத்தில் உள்ள கலோரிகளில் 90 சதவீதம் சர்க்கரையில் மட்டுமே உள்ளது. மேலும், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின் சி, தாமிரம், ஃபோலேட், வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் ஆகியவற்றுடன் நார்ச்சத்தும் மாம்பழத்தில் நிறைந்து உள்ளது.

கலோரிகள் அதிகமுள்ள பழமாக இருந்தாலும் கிளைசெமிக் அளவு மாம்பலத்தில் குறைவு. மேலும் மாம்பலத்தில் நார்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ கார்போஹைட்ரேட்டுகள், ஃபோலேட், மெக்னீசியம், தாமிரம், பாஸ்பரஸ்,  இரும்பு, துத்தநாகம் போன்ற சத்துக்கள் அதிகமுள்ளது. 


மாம்பழம் இரத்தத்தில் உள்ள சுகர் லெவலை சட்டென்று அதிகப்படுத்திவிடும். அதனால் மாம்பழம் சாப்பிடுவது உகந்ததல்ல என்று மருத்துவர்கள் செல்வதுண்டு. மாம்பழத்தில் நார்ச்சத்து இருக்கிறது மேலும் புரதத்துடன் (வேர்கடலை) மாம்பழம் சாப்பிடும் போது இன்னும் சுகர் லெவல் கட்டுக்குள் இருக்கும்.  

ஆனால் நான் எந்த நேரத்தில் உட்கொள்கிறோம் என்ற நேரமே சர்க்கரை அளவு இரத்தத்தில் ஏறும் விகிதத்தை முடிவு செய்கிறது. காலை மதிய உணவின் இடை வேளைகளில் உண்ணலாம். மாலை மற்றும் இரவில் அறவே மாம்பழம் உண்ணக்கூடாது. 

ஆகவே மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு அளவான மாம்பழத் துண்டுகளை நீரழிவு நோயாளிகள் உண்ணலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how diabities patent can eat mangoes follow theses steps


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->