தூங்குவதற்கு முன் இதை செய்தால் உங்களுக்கே தெரியாமல் உங்கள் எடை திடீரென குறையும்.! - Seithipunal
Seithipunal


உடல் எடையை ஒருவர் குறைப்பது சாதாரணமான விஷயம் இல்லை. அதற்கான திட்டமிடல், முயற்சிகள் தேவை. 

ஒரு திட்டமிடப்பட்ட உடற்பயிற்சி மற்றும் டயட் உள்ளிட்டவை தான் உடல் எடையை குறைக்க உதவும். 

தற்போதுள்ள சூழலில் நேரமின்மையால் இதற்கு நம்மால் நேரத்தை ஒதுக்க முடியாது. நேரம் கிடைக்கும்போது ஜிம்மில் கடினமாக உழைத்து உயர்வை சிந்துவதை பலரும் வழக்கமாக கொண்டிருப்பார்கள். பலருக்கு அதுவும் கேள்விக்குறியான செயல்தான்.

எளிமையான வழிகள் மூலம் தூங்கிக் கொண்டிருக்கும் போதே எடையை குறைக்க முடியும் என்று கூறினால், உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அது உண்மைதான்.

நீங்கள் படுக்கைக்கு செல்வதற்கு முன் உங்களை சுற்றி நீங்கள் செய்யக்கூடிய செயல்களினால் எடையை குறைக்கலாம். 

இரவில் அதிகமாக தூங்குவது எந்த முயற்சியும் இல்லாமல் ஒருவர் 270 கலோரிகளை குறைவாக சாப்பிட உதவுகின்றது. ஆரோக்கியமற்ற பசியின் மீது உங்களுக்கு ஆர்வம் இல்லாமல் போகும். இதனால் உடல் எடை குறைப்பது சாத்தியமாகும். 

தூங்குவதற்கு முன் புரோட்டின் ஷேக் குடிக்கலாம். நள்ளிரவு நேரத்தில் பசி எழுவதை இது தடுக்கும். கார்போஹைட்ரேட்டுகளுடன் ஒப்பிடும்போது அதிக கலோரிகளை எரிக்க இது உதவும்.

போர்வை இல்லாமல் தூங்குவது உங்கள் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். அதிக கலோரிகளை ஒரே நேரத்தில் எரிக்க இது வழி வகை செய்கிறது. குறைந்த வெப்பநிலை இருக்கும் அறைகளில் தூங்குவதனால் உடலில் இருக்கும் பழுப்பு நிற கொழுப்பை அது அதிகரிக்கிறது. இது நல்ல கொழுப்பு, இந்த கொழுப்பினால் ரத்த சக்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்.

கண்டிப்பாக பசியுடன் தூங்கும் தவறை மட்டும் செய்து விடாதீர்கள். இதனால் வளர்ச்சிதை மாற்றத்தில் எதிர்மறை பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் நமது உடலில் இருக்கும் செரிமான மண்டலத்தின் இயக்கம் தடைபடும். எனவே உடலில் கரைக்க வேண்டிய கொழுப்புகள் தடைபடக்கூடும்.

வெளிச்சம் இல்லாத இருட்டான அறைகளில் தூங்க வேண்டும். ஆராய்ச்சிகள் மற்றும் ஆய்வுகளின் முடிவின்படி வெளிச்சம் இல்லாத அறையில் தூங்குபவர்களுக்கு உடல் எடை குறைய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, அறையில் தொலைக்காட்சியை போட்டுக்கொண்டு தூங்குவதோ அல்லது லைட் போட்டுக் கொண்டு தூங்குவதையோ தவிர்க்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Follow These Idea To weight Loss


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->