உடல் எடை குறைக்க ரொம்ப கஷ்டப்படுறீங்களா? உங்களுக்காக சில டிப்ஸ்! - Seithipunal
Seithipunal


அதீத உடல் எடை என்பது  எல்லோருக்கும் இருக்கின்ற பொதுவான ஒரு பிரச்சனையாகும். யாருமே அதிக எடையுடன் இருப்பதை விரும்பவில்லை. அதிக எடையுடன் இருப்பது ஆரோக்கியமான ஒன்று அல்ல. எல்லோராலும் உடற்பயிற்சிகளை செய்து எடை குறைப்பில் ஈடுபடுவதற்கு நேரம் இருக்காது. அதுபோன்று இருப்பவர்கள் ஒரு சில பானங்களை குடிப்பதன் மூலம் நம் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்  அவை என்னென்ன பானங்கள் என்று பார்ப்போம்.

பொதுவாக காலையிலேயே குளிர்ந்த பானங்களை குடிக்காமல் வெதுவெதுப்பான பானங்களை குடித்து நம் உடலை எடையை குறைப்பது  ஆரோக்கியமான ஒன்றாகும் . மேலும் இது நமது உடல் எடை வேகமாக குறையவும் உதவுகிறது.

ஓமம் நீரை காலை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் நம் உடல் எடையை குறைக்கவும்  அதனை கட்டுக்குள் வைத்திருக்கவும் முயற்சி செய்யலாம். வெதுவெதுப்பான நீரில் ஓமத்தை கொதிக்க வைத்து அதை தினமும் குடித்து வர வேண்டும் .

கிரீன் டீ எடை குறைப்பிற்கு மிகச்சிறந்த பானமாகும். சாதாரணமாக நாம் அருந்தும் தேநீருக்கு பதிலாக கிரீன் டீ குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.

சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து அதை வடிகட்டி அந்த சாறை குடிப்பதன் மூலம் உடல் எடை குறைவதற்கும் உடல் எடையை  பராமரிக்கவும் உதவும்.

வெந்தயம் உடல் எடை குறைப்பிற்கு முக்கியமான பானம். வெந்தயத்தை இரவில் நீரில் ஊறவைத்து அந்தத் தண்ணீரை காலையில் குடித்து வருவதன் மூலம் நம் உடல் எடை குறையவும்  உடலின் உஷ்ணம்  குறைந்து உடல் குளிர்ச்சியாகவும் உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Easy Tips for weight loss


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->