கர்ப்பமான பெண்களுக்கு கர்ப்ப நேரத்தில் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள்.!! - Seithipunal
Seithipunal


பெண்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் அவர்களின் உடலில் பல விதமான மாற்றங்கள் மற்றும் பல விதமான உடல் வலிகள் ஏற்படும். அவ்வாறு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த பதிவில் காண்போம். 

முதுகுவலி:

கர்ப்பமாக இருக்கும் காலத்தில் பெண்களின் வயிறு முன்னோக்கி தள்ளப்பட்டும்., உடலின் எடையானது அதிகரிப்பதன் மூலமாக முதுகுவலியானது ஏற்படும். இதுமட்டுமல்லாது இடுப்பு பகுதியில் இருக்கும் தசைநார்களானது பிரசவ காலத்திற்கு தயாராக இருப்பதன் காரணமாக இடுப்பில் சில உணர்வுகள் ஏற்படும். இந்த பிரச்சனையை எதிர்கொள்வதற்கு உட்காரும் சமயத்தில் நேராக அமர்ந்தும்., உறங்கும் வேளையில் கால்களுக்கு நடுவே மெல்லிய தலையணையை வைத்து உறங்குவது., ஹீல்ஸ் போன்ற காலணிகளை அணிவதை தவிர்ப்பது முதுகு வலியில் இருந்து விலக்கம் அளிக்கும். 

இரத்தக்கசிவு: 

கர்ப்பமான பெண்களுக்கு சில நேரத்தில் மெல்லிய இரத்த கசிவும்., துளித்துளியாக இரத்தக்கசிவு இருக்கும். இந்த பிரச்சனை இருக்கும் பட்சத்தில்., நஞ்சுக்கொடி விலகல்., குறைப்பிரசவம் போன்ற பிரச்சனைகளின் அறிகுறிகள் ஆகும். இந்த பிரச்சனை இருக்கும் பட்சத்தில்., உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. 

பொய்மையான வலி: 

பிரசவத்திற்கு முதல் அறிகுறியாக இடுப்பு வலியானது ஏற்படுகிறது. கர்ப்பப்பையில் இருக்கும் தசைகள் இறுக்கமடைந்து வலியானது ஏற்படும். இந்த சமயத்தில் ஏற்படும் பொய் வலியானது., உண்மையான இடுப்பு வலிக்கான ஒத்திகை அல்லது முன்னெச்சரிக்கை என்று கூட கூறலாம். பிரசவ நேரத்தில் ஏற்படும் வலிக்கும்., இடுப்பு வலிக்கும் அதிக வித்தியாசங்கள் உண்டு. பொய் வலி ஏற்படும் சமயத்தில் நின்று கொண்டு இருப்பது., படுத்திருப்பது மற்றும் அமர்வது போன்று செய்தல் பொய் வலியை குறைக்கும். 

மார்பகத்தின் அளவு அதிகரிப்பது: 

பெண்கள் கர்ப்பமாக இருந்து குழந்தை பிரசவிக்கும் நேரத்தை குறிக்கும் வகையில் மார்பகத்தின் அளவிலும் சில மாற்றங்கள் ஏற்படும். மார்பகத்தின் ஹார்மோன்கள் தாய்ப்பால் சுரப்பதற்கு தயாராகி இருப்பதாய் மார்பகம் விரிவடைந்து உணர்த்தும். மார்பக காம்புகளில் இருந்து மஞ்சள் நிறத்திலான திரவம் கசிய துவங்கி., பின்னர் சீம்பால் வெளியேறும். குழந்தை பிறந்தவுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதர்க்கு சீம்பால் தருவார்கள். இந்த நேரத்தில் சரியான உள்ளாடையை தேர்வு செய்வது அவசியம். 

திரவங்களின் கசிவு; 

கர்ப்பிணி பெண்கள் பிறப்புறுப்பில் இருந்து திரவமானது கசிவது இயல்பான ஒன்றுதான். பிரசவ நாளானது நெருங்கும் நேரத்தில் அடர்த்தியான மற்றும் தெளிவான உதிரம் கலந்த திரவமானது கசியும். இந்த திரவம் கசிவது பிரசவத்திற்குரிய நெகிழ்வு அறிகுறியாகும். இந்த கசிவானது அதிகமாக இருக்கும் பட்சத்தில்., உடண்டிஐக மருத்துவரை அணுக வேண்டும். அளவுக்கு அதிகமாக திடீரென நீரானது பெருக்கெடுப்பது., பனிக்குடம் உடைந்ததன் அறிகுறி. ஆகவே., மருத்துவரை உடனடியாக அணுகுவது நல்லது.  

English Summary

during pregnancy woman attend this problem and solutions


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal