கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடல் எடை எவ்வுளவு அதிகரிக்கலாம்?.! உடல் எடை அதிகரிப்பு மற்றும் அதற்கான காரணங்கள்.!! - Seithipunal
Seithipunal


பெண்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் அவர்களுக்கு பல சந்தேக கேள்விகள் தொடர்ந்து எழுவது வழக்கம். அன்றைய காலத்தில் கூட்டு குடும்பமாக வாழ்ந்த சமயத்தில் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு பாட்டி வைத்தியத்தின் மூலமாக செய்து வழங்கி தாயின் நலனையும்., சேயின் நலனையும் பாதுகாப்பார்கள். 

கர்ப்ப காலங்களில் குழந்தையின் உடல் நலத்திற்கும்., தாயின் உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் வகையில்., அதிகளவில் சாப்பாடுகளை வழங்கி சாப்பிட சொல்வார்கள். மேலும்., அவர்களை எந்த ஒரு வேலையையும் பார்க்க விடாமல் ஓய்வெடுக்க சொல்லுவார்கள். இதனால் அவர்களின் எடையானது அதிகளவு அதிகரிக்கும்.  

இதனால் உடல் எடையானது வெகுவாக அதிகரித்து அதுவே சில நேரங்களில் பிரசவத்திற்கு பின்னரும் தொடரும் நிலையும்., சிலருக்கு பிரசவத்திற்கு பின்னர் உடலின் எடை குறைந்துவிடும். கர்ப்ப காலத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும்., ஒவ்வொரு விதமான உடல் எடையானது அதிகரிப்பு நிகழும். கர்ப்பமாக இருக்கும் பெண்களின் உயரம்., எடை மற்றும் வயது ஆகியவற்றை பொறுத்து உடல் எடை அதிகரிப்பது நல்லது. 

பிரசவத்திற்கு முன்னர் உள்ள எடையை விட சராசரியாக பன்னிரண்டு கிலோ எடையானது அதிகரிக்கும். கர்ப்ப காலத்தில் கர்ப்படைந்த உடனடியாக எடையானது அதிகரிக்காது. முதலில் ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தி., பசியின்மை போன்ற காரணத்தால் உடலின் எடையானது முதல் மூன்று மாதங்களுக்கு எந்த விதமான மாற்றமும் இருக்காது. இந்த நேரத்தில் இயல்பை விட திடீரென குறைவதற்கும் வாய்ப்புள்ளது. 

உடல் எடையானது ஐந்து கிலோ முதல் பத்து கிலோ வரை குறையும் பட்சத்தில்., மருத்துவரை அணுகுவது நல்லது. உடலின் எடையானது கர்ப்பமான வாரத்தில் இருந்து 12 வது வாரம் முதல் 14 வது வாரத்தில் இருந்து அதிகரிக்க துவங்கும். இந்த நேரத்தில் வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படும் பிரச்சனை இல்லை என்பதால்., அதிகளவு பசியெடுத்து உடலின் எடையானது அதிகரிக்கும். இந்த நேரத்தில் சத்துக்கள் அதிகம் வழங்கும் பழங்களை சாப்பிட வேண்டும். 

பின்னர் சுமார் 20 வது வாரம் வரை உடலின் எடையானது அதிகரித்து பின்னர் குழந்தையின் வளர்ச்சியும் அதிகரித்து 30 வது வாரத்திற்குள் உடலின் எடையானது அதிகரித்து விடும். பின்னர் குழந்தையை பெற்றெடுத்த பின்னர் உடலின் எடையானது குறைய துவங்கும். கர்ப்ப காலங்களில் மார்பகத்தின் வளர்ச்சி., வயிறு., கருப்பை மற்றும் பனிக்குடத்தில் உள்ள நீரின் அளவு என்று உடலின் எடையை வெகுவாக அதிகரித்துவிடும். 

கர்ப்பமான பெண்களின் உடலில் அதிகளவு நீர்சத்து சேர்வது., ஹார்மோன்கள் சுரப்பது., உணவு பொருளில் வாசனை பொருட்களை சேர்ப்பது அளவுக்கு அதிகமாக இருந்தால் உடலின் எடையானது வெகுவாக அதிகரிக்கும். உடலின் எடையை அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சோதித்து கொள்வது நல்லது. 

கர்ப்பிணி பெண்களுக்கு திடீரென உடலின் எடை அதிகரித்துள்ளது என்று கூறினால்., மருத்துவர் முறையற்ற உணவு பழக்கத்தை கையெடுத்துளேளர்கள் என்று கூறிவிடுவார்கள். உடலின் எடை அதிகரித்துவிடும் என்று கூறி சாப்பிடாமல் இருந்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே அளவோடு உண்டு குழந்தையை பெற்றெடுத்து வளமுடன் வாழ வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

during pregnancy how many weight have woman


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->