ஆஃப் பாயில் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா.?! இத்தன நாளா தெரியாம போச்சே.!  - Seithipunal
Seithipunal


உடற்பயிற்சி மற்றும் பாடி பில்டிங்  செய்பவர்கள்  முட்டையை பச்சையாகவே உட்கொள்வார்கள். ஆனால் முட்டையை பச்சையாக உட்கொள்வது  நம் உடல் நலத்திற்கு உகந்ததல்ல . அதில் இருக்கக்கூடிய  'சால்மனல்லலா'  போன்ற நச்சுத்தன்மை நம் உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கின்றன .

முட்டையை பொரித்து அல்லது  குழம்பாக உட்கொள்ளும் போது  அதில் சேர்க்கக்கூடிய மூலப் பொருட்கள் மற்றும்  எண்ணெய் ஆகியவற்றின் காரணமாக  அதனுடைய  கலோரி அளவு கூடி  நம் உடலில் கொழுப்பாக தேங்கி விடுகிறது. இதனால் முட்டையை  வேகவைத்து சாப்பிடுவது சிறந்த வழியாகும். 

ஆனால் வேகவைத்து சாப்பிடும் போது  முட்டையை அதிக அளவில் நாம் வேகவைத்து விட்டால்  அதில் இருக்கக்கூடிய சத்துக்களின் அளவு  குறைந்துவிடும். முட்டையானது அதிக அளவில் வேக வைக்கும் போது அந்த வெப்பத்தின் காரணமாக  அதில் இருக்கக்கூடிய புரதங்கள் சிதற வாய்ப்பு இருக்கிறது .

இதனால்  முட்டையில் இருக்கக்கூடிய அனைத்து சக்திகளையும்  நாம் பெறுவதற்கும்  கலோரி அளவு கூடாமல்  அதனை சாப்பிடுவதற்கும் சிறந்த வழி  'ஆஃப் பாயில்' ஆகும் . இப்படி முட்டையை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம்  அதில் இருக்கக்கூடிய சத்துக்கள்  சிதறாமலும்  குறைந்த  கலோரி  அளவிலும்   நான் முட்டையை உண்ணலாம் .

 இந்த  ஆஃப் பாயில்  முட்டையை உண்பதால்  அதில் இருக்கக்கூடிய சத்துக்கள் முழுமையாக நம் உடலுக்கு கிடைக்கிறது . மேலும் இந்த முறையில் நாம் குறைந்த நேரமே முட்டையை  சமைப்பதாலும்  குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்துவதாலும், இது உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிப்பது இல்லை . எளிதில்  செரிமானமாக உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அனைவரும் இதனை உண்டு  முட்டையில் இருக்கும் அனைத்து பயன்களையும் பெறலாம் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits Of Egg Of boil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->