வெள்ளரிக்காயை சமைத்து சாப்பிடலாமா.?!  - Seithipunal
Seithipunal


காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்க தொடங்கும் முன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. விரல்கள் கறுத்து போகாமல் இருக்கும்.

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கும். நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புகளை கரைக்க மிகவும் சிறப்பான உணவு பொருள் ஆகும்.

முருங்கைப்பட்டைத் தூள், சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை பொடி செய்து, வெந்நீரை காய்ச்சி, அப்பொடியை போட்டு கலக்கி, மூன்று வேளையும் சாப்பிட்டால் குடற்புண், டைபாய்டு, இருமல் குணமாகும்.

கிரேவி செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைசாக அரைத்து சேர்த்தால் கிரேவியின் சுவை அருமையாக இருக்கும்.

ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவை ஒன்றிரண்டாக பொடி செய்து போட்டு கிளறி வடகம் அல்லது வற்றல் செய்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியாகவும் இருக்கும்.

மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற முடியாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைத்து, பிறகு நீரை கீழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.

பச்சை மிளகாய் வாங்கும் போது நீளமானது, சற்று காரம் குறைவாக இருக்கும். குண்டானது, தான் காரம் தூக்கலாகவும், வாசனையாகவும் இருக்கும். இதுவே சமையலுக்கு சிறந்தது.

ரசத்தில் புளி குறைந்து விட்டால், கைவசம் மாங்காய் பொடி இருந்தால் போதும். கால் தேக்கரண்டி மாங்காய் பொடி சேர்த்தால், தேவையான புளிப்பை தந்துவிடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of cucumber in tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->