உடலுக்கு ஆரோக்கியமான சத்துக்களை தரும் கொண்டக்கடலை.! - Seithipunal
Seithipunal


கொண்டைக்கடலை அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதம் நிறைந்த எல்லோராலும் சாப்பிடக் கூடிய வகையில் எல்லா இடங்களிலும் கிடைக்கும் ஒரு கடலை வகையைச் சார்ந்தது.

கொண்டக்கடலையில் அதிக அளவு புரதச்சத்தும் மாவுச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில்  நார்ச்சத்துக்களும் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகளும் உள்ளன. இதைத்தவிர இரும்பு மக்னீசியம் மாங்கனிஸ் தாமிரம், போன்ற தாது உப்புகளும், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்களும் நிறைந்துள்ளது 

கொண்டைக்கடலை நம் உடலின் ரத்தமானது சர்க்கரையை குறைவான அளவில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

கொண்டைக்கடலில் இருக்கக்கூடிய 'ஸ்டெரோல்' என்ற பொருளானது கொலஸ்ட்ரால் போன்றே இருந்தாலும் இந்தப் பொருளானது நம் ரத்தத்தில் கெட்ட கொழுப்பிற்கு பதிலாக  நல்ல கொழுப்பை உட்கிரகிக்க பயன்படுகிறது. இதன் காரணமாக நம்மை இதய நோயில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.

கொண்டைக்கடலையில் இருக்கும் அதிக புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள், நாம் குறைவாக எடுத்துக் கொண்டாலும் அதிக நேரம் நமக்கு பசி வராமல் தடுப்பதால் உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.

கொண்டைக்கடலில் இருக்கின்ற அதிக அளவு புரதச்சத்தானது  நாம் அசைவ புரதத்திற்கு பதிலாக இதனை பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of chickpeas


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->