ரத்தத்தை சுத்திகரிக்கும்.. பீட்ரூட் ஜூஸில் இவ்வளவு நன்மைகளா.?!  - Seithipunal
Seithipunal


காய்கறிகளில் மிகவும் பயனுள்ளது பீட்ரூட். இதில், ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்துள்ளன. இதில், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், கால்சியம், சிங் இரும்புச்சத்து காப்பர் மற்றும் நைட்ரேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

பீட்ரூட் சாப்பிடுவதால் ரத்த சோகை ஏற்படுவதை  தடுக்கலாம். உடம்பில் புது ரத்தம் உற்பத்தியாகும். பீட்ரூட் விலை குறைவாக கிடைப்பதால் இதில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று நிறைய பேருக்கு தெரிவதில்லை.

இதை தொடர்ந்து, சாப்பிட்டு வந்தால் பல நோய்கள் ஏற்படுவதை தடுக்க கூடியது. இதை சமைத்தும் சாப்பிடலாம். அல்லது ஜூஸ் போட்டும் குடிக்கலாம்.

 

பீட்ரூட் ஜூஸ் தினமும் அருந்துவதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். அனிமியா ஏற்படுவதை தடுக்கக்கூடியது. கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கக்கூடியது. 

உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும். மேலும்,  புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். உடல் எடையை குறைக்கும். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் அஜீரண கோளாறுகளை போக்கக்கூடியது.

இந்த பீட்ரூட்டை வாரம் இரண்டு முறையாவது ஜூஸ் போட்டு ஒரு டம்ளர் குடித்து வந்தாலே ரத்தத்தை சுத்தப்படுத்தும்  உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இதை, அனைவரும் குடித்து பயன்பெறுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of beetroot juice


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->