வீட்டில் கற்றாழை வளர்ப்பதால் என்னென்ன நன்மைகள்? - வாங்க பார்ப்போம்.! - Seithipunal
Seithipunal


ஒரு மருத்துவ தாவரமான கற்றாழை பல வகையான பிரச்சனைகளுக்கு மருந்தாக செயல்படுகிறது. இந்தச் செடியை வீட்டுக்குள்ளும், வெளியிலும் வளர்ப்பதால் பல நன்மைகள் உள்ளன.

* கற்றாழையை வீட்டில் வளர்த்தால் மாசுக்களை உறிஞ்சி சுத்தமான சூழலை உருவாக்கும். காற்றின் தரம் மேம்படுவதால், சுவாச நோய்களின் ஆபத்து குறைகிறது.

* கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால், தோல் பராமரிப்பு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. கற்றாழை ஜெல் பல நோய்களுக்கு மருந்தாகவும், சிகிச்சையாகவும் பயன்படுகிறது. கற்றாழை இலைகளை வெட்டி, தோல் நீக்கி அதில் உள்ள ஜெல்லை ஜூஸ் செய்து குடிக்கலாம். சருமத்திலும் தடவலாம்.

* கற்றாழை ஜெல் முகப்பரு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. கற்றாழை ஜெல்லை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை குறையும். இதில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ ஆகியவை சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

* கற்றாழை செடி மன அழுத்தத்தை போக்குவதுடன் மன அழுத்தத்திலிருந்து விரைவாக மீள உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், கற்றாழை செடிகள் வீட்டில் நேர்மறை ஆற்றலை பரப்புகின்றன. ஆன்மிக ரீதியாகவும் மனதை தூய்மைப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. அதனால் எதிர்மறையான விஷயங்களில் மனம் செல்லாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

benefit of aloe vera plant


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->