பேச வேண்டிய ஸ்டாலின் எங்கே?! வலை வீசி தேடும் ஐநா சபை?!   - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி இரவு முதல் ஊடங்களில் மாறி மாறி செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. "உலக தலைவர்கள் வரிசையில் ஐநா சபையில் பேச மு.க. ஸ்டாலினை  ஐநா சபையே அழைத்துள்ளது" என்று திமுகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். 

அவர்கள் வெளியிட்ட செய்தியானது, "ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் வரும் செப்டம்பர்  9ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடக்கிறது. ஜெனீவாவில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அழைக்கப்பட்டுள்ளார். இந்த கூட்டத்தில்... ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் தற்போதைய நிலை, காஷ்மீரில் அதிரடியாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்து மு.க.ஸ்டாலின் விவாதிப்பார்" - இப்படி ஒரு செய்தியை அனைத்து அச்சு ஊடகங்களிலும், இணைய பதிப்புகளிலும் வெளிவர வைத்துள்ளார்கள்.  

இந்த நிலையில் இன்று வரை ஐநா சபைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சென்றதாகவோ, பேசியதாகவோ தகவல் இல்லை. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் ஆனது கடந்த செப்டம்பர்  9ஆம் தேதி முதல் 27ஆம் தேதி அதாவது இன்று வரை நடக்கிறது. இதன்மூலம் ஸ்டாலின் ஐநா சபைக்கு செல்லவில்லை என்பது உறுதியாகிறது. அதேசமயம் பசுமைத்தாயகம் அமைப்பின் வழியாக பாமக கோவை மாவட்ட நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி ஐநா சபை சென்று இலங்கை விவகாரம் குறித்து பேசியுள்ளார். பின் ஏன் திமுக அவ்வாறு விளம்பரம் செய்தது என்ற கேள்வி பலமாக சமூக வலைத்தளங்களில் ஒழித்து கொண்டிருக்கிறது. 

இவ்வாறு அறிவித்துவிட்டு செல்லாமல் இருப்பது இது முதல் முறையும் அல்ல. இது ஏற்கனவே 2017 ஆம் ஆண்டில் நிகழ்ந்த நிகழ்வு தான். 2017 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கூடிய ஐநா மனித உரிமைகள் பேரவையின் 35 ஆம் கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. ஆனால், இல்லாத ஒரு கூட்டத்திற்கு, மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டது போலவும், தமிழ்நாட்டில் சட்டமன்றம் கூடுவதால் அதற்கு வர இயலவில்லை என அவர் மறுத்ததாகவும் - அப்போதே ஒரு பொய்யான தகவலை திமுகவினர் பரப்பினார்கள். தற்போதும் அதுபோல தான் நடைபெற்றுள்ளது. 

ஸ்டாலின் முதலில் இந்த கூட்டத்திற்கு செல்வதற்கு தயாராக தான் இருந்துள்ளார். ஆனால் அவர் அங்கு செல்வது, பேசும் சிறப்பு அழைப்பாளராக இல்லை, பார்வையாளர் போல தான் என பசுமைத்தாயகம் மாநில பொதுச்செயலாளர் அருள் ஊடகங்களுக்கு செய்தியை அனுப்பிவிட, திமுகவின் பொய்யான விளம்பரம் ஒரே நாளில் முடிவுக்கு வந்தது.  அருள் வெளியிட்ட செய்தியில், "மு.க. ஸ்டாலினுக்கு ஐநா மனித உரிமைகள் பேரவை சார்பில் எந்த அழைப்பும் அனுப்பப்படவே இல்லை. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுகவினர் ஆன்லைன் மூலம் பதிவு செய்து அதன் ஒப்புகை சீட்டை வைத்துக்கொண்டு, "ஐநா சபையே மு.க. ஸ்டாலினை அழைத்தது" என பொய்யான தகவலை பரப்பி கொண்டிருக்கிறார்கள்! ஆனால், இவர்கள் பதிவு செய்ததற்கான ஒப்புகை சீட்டிலேயே, அது அழைப்பு அல்ல. கணினியில் தானாக உருவாக்கப்பட்ட சான்று மட்டுமே என்று கூறியுள்ளார்கள். 

உண்மையில், ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டங்களில் பார்வையாளராக பங்கேற்கவும், அறிக்கை சமர்ப்பிக்கவும், பேசவும், துணைக்கூட்டம் நடத்தவும் ஐநா அவையால் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்புகளுக்கும் அனுமதி உண்டு. அது போன்ற ஒரு துணை அமைப்பு தான் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் என்ற அமைப்பு ஆகும் (NGO in Special Consultative with the United Nations ECOSOC). பசுமைத் தாயகம் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டால், யாருக்கு வேண்டுமானாலும், மு.க. ஸ்டாலினுக்கு வந்தது போன்ற கடிதம் வரும். ஏற்கனவே பசுமைத்தாயகம் சார்பில் பா.ம.கவின் அடிப்படை உறுப்பினர்கள் கூட இவ்வாறு ஐநா சபை சென்று வந்த வரலாறு உண்டு. 

பசுமைத்தாயகம்  போன்று, பிரான்சில் உள்ள Association Bharathi Centre Culturel Franco-Tamoul எனும் ஒரு NGO சார்பில் மு.க. ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். அதற்கான ஒப்புதல் சீட்டை ஐநாவின் கம்ப்யூட்டர் தானாக அனுப்பியுள்ளது (confirmation of registration generated automatically). அதை வைத்து திமுகவினர் ஐநா சபையே அழைத்ததாக கூறுகிறார்கள். மேலும், நடைபெற இருக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 42 ஆம் கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் குறித்த விவாதம் இடம்பெறவில்லை. ஈழத்தமிழர் விவகாரம் அடுத்த ஆண்டு 2020 மார்ச் மாதம் நடைபெறும் 43 ஆவது கூட்டத்தில் தான் வர இருக்கிறது.

இந்நிலையில், "உலக நாடுகளின் தலைவர்கள் பட்டியலில்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஐநா சபை அழைத்துள்ளது" என்றும், கூட்டத்தின் அஜெண்டாவிலேயே இல்லாத "ஈழத்தமிழர் விவகாரம் குறித்து மு.க. ஸ்டாலின் பேசுவார்" என்றும் முன்னணி நாளிதழ் ஒன்று செய்தியும் வெளியிட்டுள்ளது. இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், இந்த தானியங்கி ஒப்புகை சீட்டு கூட - பிரான்ஸ் நகரில் உள்ள Association Bharathi Centre Culturel Franco-Tamoul அமைப்புக்கு தான் அனுப்பப்பட்டதே தவிர, திமுகவுக்கு இல்லை!" என கூறியிருந்தார். 

மேற்கண்ட உண்மை நிலவரம் வெளியே தெரியவரவே முக்கியத்துவம் இல்லாத கூட்டத்தில் கலந்து கொள்ள ஸ்டாலின் செல்லவில்லை என கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரம் குறித்து திமுகவோ, அதன் சார்பு ஊடகங்களோ வாயவே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்பறம் "பேச வேண்டிய ஸ்டாலின் எங்கே?! வலை வீசி தேடும் ஐநா சபை?!" செய்தியின் தலைப்பு இப்படி இருக்கிறதே என நீங்கள் கேட்கலாம்.. இந்த விவகாரம் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பவர்கள் இப்படித்தான் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின் ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதற்கு திமுக விளக்கம் கொடுக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

where is stalin? in UN


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->