தமிழக எம்பிக்களின் சாதி பட்டியல்! இந்தியா அளவில் தேடிய நீங்கள், தமிழகத்தில் தெரிந்துகொள்ள வேண்டாமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள மக்கள் எப்போதுமே சற்று வித்தியாசமானவர்கள் என்பது நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளை பார்க்கும் பொழுது தெரிந்திருக்கும். இந்தியா முழுவதும் ஒரு மாதிரி இருக்க, தமிழகத்தில் வேறு மாதிரி இருந்தது. அது போலதான் மத்திய அரசு பதவியேற்றதும் நம் தமிழகத்தில் சிலர் வித்தியாசமாக சிந்தித்து சமூக நீதி குறித்த தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்தார்கள். 

மத்திய அமைச்சரவை பதவி ஏற்றதும், எந்த சமூகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது? சமூகநீதி பின்பற்றப்படுகிறதா? போன்ற பல தகவல்களை தமிழகத்திலுள்ள முற்போக்குவாதிகள் பேசத் தொடங்கினார்கள். அதன்பிறகுதான் இந்திய அளவில் அவர்கள் பார்க்க, நாம் தமிழக அளவில் பார்க்கலாம் என தமிழக மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 39 தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் எத்தனை பேர் எந்த எந்த சமூகத்தில் கிடைத்துள்ளார்கள் என்ற தகவலையும், சமூகநீதி சரியான முறையைப் பின்பற்றி பெற்றுள்ளதா என்பதையும் நாம் ஆராய்ந்து பார்த்தோம். 

அதன்படி தமிழகத்தில் வெற்றி பெற்ற 39 உறுப்பினர்களில் பிராமணர் வகுப்பை சேர்ந்தவர் ஒரு உறுப்பினர் என்றும், அதற்கு அடுத்தபடியாக அதிக பட்சமாக முக்குலத்தோர்களில் மட்டும் 8 பேர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்கள் என்றும், அதில் அகமுடையர் பிரிவைச் சேர்ந்தவர் மூன்று பேரும், மறவர் பிரிவைச் சேர்ந்தவர் மூன்று பேரும், மற்றும் கள்ளர் பிரிவைச் சார்ந்த இருவரும் இடம்பெற்றுள்ளார்கள். 

அதற்கடுத்தபடியாக 7 தனி தொகுதிகளில் போட்டியிட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளான ஏழு பேரில் 6 பேர் பறையர் சமூகத்தைச் சார்ந்தவர் எனவும், ஒருவர் மட்டும் பள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. அதற்கடுத்து கொங்கு வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் 6 உறுப்பினர்களும், வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் 5 உறுப்பினர்களும் வெற்றி பெற்றுள்ளார்கள். 

செட்டியார் சமூகத்தைச் சார்ந்த 3 பேர் மற்றும் நாயுடு சமூகத்தைச் சேர்ந்த இருவரும், நாடார் சமூகத்தைச் சார்ந்த இருவரும், இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த இருவரும், உடையார் சமூகத்தைச் சார்ந்தவர் ஒருவரும், ரெட்டியார் சமூகத்தை சார்ந்த ஒருவரும், இஸ்லாமியர்கள் பிரிவினைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெற்று உள்ளார்கள்

இதில் யார் யார் எந்த சமூகம் என்பதை கிடைத்த தகவலின்படி எண்ணிக்கையில் மட்டும் கூறியுள்ளோம். இந்த கணக்கில் பிழைகள் இருக்காது இருப்பின் கமெண்டில் கூறவும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TAMILNADU MP LIST COMMUNITY BASIS


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->