சரத்குமாரை வைத்து எதிர்பாராத பிளான் போட்ட சசிகலா?! கமல் சந்திப்பின் பின்னணி இதுவா?! - Seithipunal
Seithipunal


நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமலஹாசனை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தித்தது குறித்து தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றது .

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் பங்கேற்றது. தற்போது, சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியிலிருந்து விலகி உள்ளது.

சசிகலா சிறையில் இருந்து வெளியாகிய நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சசிகலாவை நேரில் சென்று பார்த்து பேசினார். தேர்தல் நேரத்தில் இத்தகைய திடீர் சந்திப்பு அனைவராலும் கவனம் பெற்றது.

 இத்தகைய சூழலில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நடிகர் கமலஹாசனை சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து பலரும் அவர் மக்கள் நீதி மையத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர். ஆனால், தற்போது உண்மை நிலவரம் என்னவென்றால் அமமுகவுடன் மக்கள் நீதி இணையத்தை இணைக்க சரத்குமார் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தொகுதி பேரங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sarathkumar secret message to kamal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal