தந்தையின் கையெழுத்தை கூட அறியாமல், போலி கையெழுத்தை பகிர்ந்த ஸ்டாலின்?! - Seithipunal
Seithipunal


உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு க ஸ்டாலின் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வாழ்த்துச் செய்தியுடன் ஒரு படம் ஒன்றிணையும் இணைத்து முகநூலில் பதிவிட்டு இருந்தார். அந்த படம் தற்போது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 

அந்த படத்தில் தமிழ் வெல்லும் என எழுதப்பட்டு கீழே மு க என கையொப்பம் இடப்பட்டு இருந்தது. இது முன்னாள் தமிழக முதலமைச்சரும் முன்னாள் திமுக தலைவரும் ஸ்டாலினின் தந்தையுமான மு கருணாநிதி  எழுதியது என இணையதளங்களில் வைரலாகி வந்தது. இதனை பயன்படுத்தியே ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இந்த படமானது திமுகவினர், கருணாநிதியை போலவே எழுத முயற்சி செய்து, எழுதி பதிவிட்ட ஒரு படம் என கூறுகிறார்கள் இணையவாசிகள். 

இது கருணாநிதியின் கையெழுத்து இல்லை எனவும், அவருடைய கையெழுத்து வேறு மாதிரி இருக்கும் என அவர் கையால் எழுதப்பட்ட வேறு ஒரு படமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குழப்பத்தினை பார்த்த இணையவாசிகள்,  தன் தந்தையுடைய கையெழுத்தை கூட அறிந்திருக்காத தலைவராக ஸ்டாலின் இருக்கிறாரே என விமர்சனங்கள் வைத்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MK Stalin Posted in Facebook with wrong signature of his father


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->