தேர்தலை புறக்கணிக்க தயாரான மதிமுக?.. பரபரப்பு தகவல்..! அதிர்ச்சியில் திமுக தலைமை.! - Seithipunal
Seithipunal


கடந்த 2011 ஆம் வருடம் அதிமுக கூட்டணியில் உடன்பாடு ஏற்படாததால் தேர்தலை புறக்கணித்தது போல, தற்போதைய திமுக கூட்டணியில் உடன்பாடு ஏற்படாத பட்சத்தில் தேர்தலை புறக்கணிக்க மதிமுக தயாராவதாக கூறப்படுகிறது.

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள முஸ்லீம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தொகுதிகள் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

எஞ்சியுள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக கட்சிகளுடன் அடுத்தடுத்த கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. முன்னதாக விசிக சார்பில் 10 முதல் 12 தொகுதிகள் கேட்கப்பட்டு, 6 தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோப்புப்படம் : வைகோ - மு.க. ஸ்டாலின்

இதனைத்தொடர்ந்து, இன்று மாலை திமுக - மதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மதிமுக தனது கட்சி நிர்வாகிகளுடன் இரண்டாம்கட்ட ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. திமுக கூட்டணியில் இணைந்த மதிமுக சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தலாக இது உள்ளது. 

இந்த சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதிகள் மற்றும் தனி சின்னத்துடன் போட்டியிட மதிமுக முடிவு செய்துள்ள நிலையில், திமுக சார்பில் 3 முதல் 4 தொகுதிகள் மற்றும் தங்களின் கட்சி சின்னமான உதய சூரியன் சின்னத்தில் தான் மதிமுக போட்டியிட வேண்டும் என்று ஆணித்தரமாக கூறிவிட்டது. 

கோப்புப்படம் : வைகோ - ஜெ.ஜெயலலிதா

இதனால், திமுக - மதிமுக கூட்டணி உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்து வரும் நிலையில், இந்த தேர்தலில் தனியாக களம்காணலாமா? என்ற எண்ணத்திலும் மதிமுக தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது. 

அவ்வாறு இல்லாத பட்சத்தில் கமலின் மக்கள் நீதி மய்யம் அணியுடன் கைகோர்க்கலாமா? என்ற பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், எந்த விதமான உடன்பாடும் ஏற்படாத பட்சத்தில், கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொகுதி இடப்பங்கீட்டின் போது உடன்பாடு ஏற்படாமல் தேர்தலை புறக்கணித்தது போல, இப்போதும் தேர்தலை புறக்கணிக்கலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

கோப்புப்படம் : வைகோ - நரேந்திர மோடி

மேலும், கடந்த 2011 ஆம் வருடத்தில் நடைபெற்ற தேர்தல் புறக்கணிப்பிற்கு பின்னர் திமுக - அதிமுகவிற்கு எதிராக நரேந்திர மோடி அலை குறித்து பாஜக சார்பில் வைகோ தமிழகம் முழுவதும் சூடுபிடிக்க தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பதும் குருடத்தக்கது. இந்த தேர்தலை பொறுத்த வரையில், தேர்தல் புறக்கணிப்பு ஒன்று நடந்தால், அது மதிமுகவிற்கு பேரிழப்பாக இருக்கும் என்பதால், இறுதி நேரத்தில் கிடைக்கும் தொகுதியை பெற்று அமைதியாக சென்றுவிடலாம் என்ற முடிவை எடுக்கலாம் என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MDMK Plan to Boycott Election TN Assembly Poll 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->