திமுக எம்பி ஜெகத்ரட்சகன் பாஜகவில் இணைகிறார்?! வெளியான பரபரப்பு பேட்டி!  - Seithipunal
Seithipunal


திமுகவில் அதிருப்தியில் இருந்த கு.க.செல்வம் டெல்லி சென்று பாஜக தலைவரை சந்தித்த நிலையில், அடுத்ததாக அதிருப்தியில் இருக்கும் எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் இருவரும், அடுத்ததாக டெல்லி சென்று பாஜக தலைவரை பார்க்க வாய்ப்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் அடுத்தடுத்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. 

தொடர்ச்சியாக இந்த செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று அது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு திமுக எம்பி ஜெகத்ரட்சகன் பேட்டியளித்துள்ளார்.  அதில் நான் அதிருப்தியிலும் இல்லை அதே போல பிரதமரையும்  தனியாக சந்திக்க வில்லை எனவும், சமூக வலைதளங்களில் தேவையின்றி இப்படி வதந்தி பரப்பியவர்களுக்கெல்லாம்  பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். 

தன்  மீதான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதேசமயம் மீண்டும் திமுக எம்எல்ஏ  செந்தில் பாலாஜி உள்ளிட்ட சிலரும் பாஜக தலைவரை சந்திக்க  வாய்ப்பிருப்பதாக மீண்டும் சமூக வலைதளங்களில்  தகவல்கள் பரவ ஆரம்பித்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP Jegathratchgan explain about his political stand


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal