அறுபடை வீடுகளுக்கும் காவடி தூக்கும் திமுக?... தந்தை, மகனின் மாஸ்டர் பிளான்.. கந்தனுக்கு கோவிந்தா..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மாபெரும் வெற்றியை அடைய வேண்டும் என்று எண்ணியுள்ள திமுக, கடந்த காலங்களில் இந்து மதத்தினை தொடர்ச்சியாக விமர்சித்து வந்து, தற்போது இந்து மக்களின் ஆதரவை பெரும் பொருட்டு நாமம் போடும் நாடகம் அரங்கேற்றி வருகிறது. 

தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாளில் இருந்து இந்து மதம் தொடர்பான விமர்சன பேச்சுக்களை கைவிட்டுள்ள திமுக, தனது தொண்டர்களுக்கும் அதனை மறைமுக உத்தரவாக அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், டுவிட்டரில் திமுகவின் பதிவுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் உடன் பிறப்புகளும் தற்போது இந்து மதம் தொடர்பான விமர்சனங்களை கைவிட்டுள்ளதே சாட்சி என்றும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு காட்டுகின்றனர். 

தமிழகத்தில் தேர்தல் தொடர்பான பரபரப்பு தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற பல இந்து மதம் எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடர்ந்து, கறுப்பர் கூட்டத்தின் அட்டூழியங்களை வெளிப்படுத்தும் பொருட்டு வேல் பிரச்சாரமும் கையில் எடுக்கப்பட்டது. அதன்போது, திமுக கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தது. 

ஆனால், தற்போது தேர்தல் காலம் என்பதால் கொடுக்கும் இடங்களில் வேலினை வாங்கி போட்டோவிற்கு போஸ் கொடுத்திவிட்டு, நாங்கள் இந்துக்களின் எதிரிகள் இல்லை. இந்துக்களுக்கு எங்களை போல ஒரு தோழன் இல்லை என்பதை போல திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

தமிழக முதல்வர் வேல் குறித்து கூறுகையில், திருத்தணியில் அவர்களாக எனக்கு வந்து வேல் கொடுத்தார்கள் என்று மு.க ஸ்டாலின் பேசியதும், வேலினை கண்டால் முதல்வர் ஏன் பயம் கொள்கிறார்? என பிதற்றியதும் மக்களால் மறக்க இயலாதது. 

பிள்ளையார் சதுர்த்தியன்று உதயநிதி செய்த பதிவெல்லாம் இந்து மக்கள் மத்தியில் எதிர்ப்பை சந்திக்க, தற்போது தேர்தல் காலம் தொடங்கியதும் கோவிலுக்கு செல்வதும், ஆசி வாங்குவதும் என திமுகவினர் அதகளப்படுத்தி வருவதும் நினைவுகூறத்தக்கது. இன்னும் தேர்தலுக்கு இரண்டு மாதமே இருக்கும் நிலையில், சில நாட்களுக்குள் திமுக சார்பாக திமுக வெற்றிவேல் பயணம் என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இது குறித்து கருத்து தெரிவிக்கும் நெட்டிசன்கள், " அற்பனுக்கு வாழ்வு வந்தால், அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பார்களாம் என்பதை போல, தந்தையும் மகனுமான முருகனின் பெயரை சொல்லி காவடி எடுத்து வீதியில் ஆடி வந்தாலும் வரலாம் " என்று நகைச்சுவையாக பேசி வருகின்றனர். மேலும், முக்கியமாக இந்து மத விஷம பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் திமுகவின் பி அணிகளான திக, பிற மத அமைப்புகள் மவுனம் காப்பது நெட்டிசன்களால் கவனிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Master Plan about Hindu Peoples Vote Getting Using DMK Vel Yatra


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal