ஸ்டாலினை கொளத்தூரில் தோற்கடிக்க சீமானுக்கு அதிமுக ஆதரவு.?! அண்ணாமலைக்கு என்ன நிலை.?!  - Seithipunal
Seithipunal


சமீபத்திய செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் சீமான், அதிமுகவிற்கு எதிர்காலம் ஒன்று வேண்டுமென்றால் பாஜகவை கைவிட வேண்டும். திமுக காங்கிரஸை கைவிடவேண்டும். தமிழ்நாட்டிற்கு எதிர்காலமும் வேண்டுமென்றால் இந்த இரண்டு கட்சிகளையும் கைவிட வேண்டும். என்று தெரிவித்த சீமானிடம் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் எதிர்ப்பு போட்டியிடுவீர்களா என்று கேள்வி எழுப்பியதற்கு இதெல்லாம் ஒரு கேள்வியா என்று விழுந்து விழுந்து சிரித்து உள்ளார்.

பின்னர் அவர்கள் கட்சியினர் அண்ணே நீங்க நில்லுங்கள் என்று கூறியதற்கு நிக்கலாம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள் நானும் அதையே நினைக்கிறேன் இதை அப்புறம் பேசிக்கொள்ளலாம் என்று தெரிவித்துவிட்டார். 

நிலைமை இப்படி இருக்க ஸ்டாலினை சொந்த தொகுதியில் தோற்கடிக்க அதிமுக சீமானை அந்த ஒரு தொகுதியில் மட்டும் ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல்கள் கசிந்து வருகின்றன. 

கொளத்தூர் தொகுதியை கூட்டணி கட்சி ஒன்றுக்கு ஒதுக்கிவிட்டு அதிமுகவினரின் வாக்குகளை சீமானுக்கு அளித்து ஸ்டாலினை தோற்கடிக்க வேண்டும் என்று அதிமுக தலைமைக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக பாஜக அண்ணாமலை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக வெளியான தகவல்கள் இன்னமும் உறுதி செய்யப்படாதது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk may support to seeman in kolathur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->