கல்லூரி மாணவர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.! இந்திய முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பிறப்பித்த உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் விதமாக ராஜஸ்தான் மாநிலம் இந்தியாவின் முதல் மாநிலமாக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. 

வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் பரவத் தொடங்கிவிட்டது. இந்தியாவில் இன்று மாலை நிலவரப்படி 168 பேர் இந்த  நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது, இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழகம் உள்ளிட்ட  அனைத்து மாநிலங்களில் மார்ச் 31-ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 பேர் ராஜஸ்தானில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், நாடு முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்களும் செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைக்க யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது, அதன்படி, ஏற்கனவே திட்டமிடப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் அனைத்தையும் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என யுஜிசி அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் செமஸ்டர் தேர்வுகளை ஒத்தி வைக்க யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு ஒத்திவைத்தது யுஜிசி.

தற்போது கல்லூரி விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்கள் தேர்வு நடக்குமா நடக்காத என்ற குழப்பத்தில் இருந்த வந்த நிலையில் யுஜிசி-யின் இந்த உத்தரவு கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

university semester exams are postponed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->