வெளியானது டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுக்கான அட்டவணை தேதி - எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி வருகிற 2024-ம் ஆண்டுக்கான போட்டித் தேர்வு அட்டவணை டிசம்பர் 15-ம் தேதி அன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த அட்டவணையில் 30 வகையான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது என்றும், 15 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி நிரப்பி வருகிறது. குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்கள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன.

இதற்கான ஆண்டு தேர்வு கால அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், அடுத்த ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை வரும் டிசம்பர் 15ம் தேதி வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tnpsc exam time table announce date revelved


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->