#BigBreaking || அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் மூடல்.?! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு பள்ளி பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள், வரும் கல்வி ஆண்டு மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை வரும் கல்வியாண்டு முதல் மூட பள்ளி கல்வித்துறை முடிவு எடுத்துள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கின்றது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள 2381 அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்த நிலையில், அதனை தற்போது மூடப் உள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. 

மேலும் இதற்கு மாற்றாக அங்கன்வாடிகளில் நடைபெறும் மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. 

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கடந்த அதிமுக ஆட்சியில் 2018ஆம் ஆண்டு  அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

நடப்பு ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் செயல்பட்டு வரும் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படுகின்றன என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட இந்த செய்தி தமிழக அரசின் அல்லது பள்ளி கல்வித்துறையின் அதிகாரபூர்வ அறிவிப்பு அல்ல. வெளியான தகவலின் அடிப்படையிலேயே இந்த செய்தி சொல்லப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt school LKG UKG


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->