B.ED, M.ED, M.PHIL மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்! பல்கலைக்கழகத்தின் அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி..! - Seithipunal
Seithipunal


பல்கலைகழக மானிய குழுவின் அறிவிப்பை தொடர்ந்து சென்னை பல்கலைகழகம் உள்பட தமிழகதில் உள்ள பல்வேறு பல்கலைகழகங்கள் இறுதி ஆண்டு மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வில் புத்தகத்தை பார்த்து எழுதலாம் என்று அறிவித்தது. 

இந்த நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகமும் பி.எட், எம்.எட், எம்.பில் மாணவர்களை புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, இறுதி ஆண்டு மாணவர்கள் தங்களது இறுதி செமஸ்டர் தேர்வை வீட்டில் இருந்தே எழுதலாம் என்றும் விடைகளை 40 பக்கத்திற்கு மிகாமல் எழுதி கல்லூரி முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பினால் பி.எட், எம்.எட், எம்.பில் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu teachers education university announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->