திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் எப்போது? - வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நேற்று செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த  செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

"தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் இந்த ஆண்டுக்கான பருவத் தேர்வுகள், வருகிற 27-ந்தேதி முதல் மார்ச் மாதம் 23-ந்தேதி வரை அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

இந்தத் தேர்வு அட்டவணை www.tnou.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்விற்கு ஒரு வாரத்திற்கு முன்பு நுழைவுச் சீட்டு (ஹால்டிக்கெட்) பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். 

செய்முறை தேர்வுக்கான தனி (நுழைவுச் சீட்டு) ஹால்டிக்கெட் இணையதளம் மூலம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகத்தினைத் தொடர்பு கொள்ளலாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Semester Examinations of Open University date announce


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->