ஆன்லைன் செமஸ்டர் எக்ஸாம் : தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்ட  அண்ணா பல்கலைக்கழகம்.! - Seithipunal
Seithipunal


பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., (B.E, B.Tech, B.Arch) மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

வருகின்ற பிப்ரவரி 1 லிருந்து 20 வரை ஆன்லைன் மூலமாக அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களிலும் ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று, கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் என அனைத்திலும் ஆன்லைன் முறையிலேயே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று. அமைச்சர் பொன்முடி அந்த அறிவிப்பில் தெரிவித்து இருந்தார்.

மேலும், பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படும் என்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் அந்த அறிவிப்பில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பிஇ, பிடெக், பி ஆர்க் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம்வெளியிட்டுள்ளது.

வருகின்ற பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் மார்ச் மாதம் முதல் வாரம் வரை காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் இந்த தேர்வுகள் நடைபெறும் என்று, அண்ணா பல்கலைக்கழகம் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ONLINEEXAM AnnaUniversity Engineering


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->