11, 12-ம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றம்? அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு விளக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இரண்டு மொழிப்பாடங்களுக்கு பதிலாக ஒரு மொழிப்படத்தை அமல்படுத்துவதாக தமிழக அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியானது. 

இதைத் தொடர்ந்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்றிரவு இது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியவை, பள்ளிக்கல்வித்துறை பொருத்தவரையிலும் தொடர்ந்து ஆறு பாடத்திட்டங்கள் நீடிக்கும். மொழி பாட திட்டங்கள் பொறுத்தவரையில் இரு மொழிக் கொள்கையின் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். 

எந்தவிதமான மாற்றமும் பள்ளிக்கல்வித்துறை இதுவரை செயல்படுத்தவில்லை. இனியும் செயல்படுத்தப் போவதில்லை மாணவர்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. தற்போது இருக்கும் பாட திட்டங்கள் அப்படியே நடைமுறைப்படுத்தப்படும். மொழி பாடத்திட்டமாக தமிழும், ஆங்கிலமும் இருக்கும். தொடர்ந்து ஆறு பாட திட்டங்கள் நடைமுறையில் இருக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister sengottaiyan says 6 lesson plan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->