குரூப் 4 முறைகேடு: ஆடு மேய்த்தவர் தேர்வில் முதலிடம்.! வெளியான திடுக்கிடும் தகவல்கள்.! கலக்கத்தில் கறுப்பாடுகள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது, இந்தநிலையில் குரூப் 4 தேர்வில் 300க்கு 289 புள்ளி 5 மதிப்பெண் பெற்று  மாநில அளவில் முதலிடம் பிடித்த ஆடு மேய்க்கும் தொழிலாளி தலைமறைவானதாக தகவல் வெளியாகி உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வை 16 லட்சம் பேர் எழுதிய நிலையில் முதல் 100 இடங்களை பிடித்தவர்களில் ராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய 40 பேர் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக புகார் எழுந்தது.

கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் அந்த 40 பேரில் 90 சதவீதம் பேரும் தமிழர்கள் அல்லாதவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்தவர் சிவகங்கை மாவட்டம் பெரிய கண்ணனூர் என்ற கிராமத்தை சேர்ந்த 46 வயதான திருவராஜ் இவர் ஆடுமேய்க்கும் தொழில் செய்து வருகிறார். 

தொடர்ந்து படித்து பல ஆண்டுகளாக இந்த தேர்வை எழுதியவர்கள் கூட 300க்கு 250 மதிப்பெண்ணை எட்டிப்பிடிப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆனால் 25 வருடங்களுக்கு முன்பு கல்லூரி படிப்பை முடித்த திருவராஜ் ஆடு மேய்க்கும் தொழிலை பிரதானமாக செய்து வருகிறார். திருவராஜ், 300க்கு 289.5 மதிப்பெண் எடுத்தது எப்படி என்பது பலரின் கேள்வியாக உள்ளது.

மேலும், திருவராஜின் ஊருக்கு அருகிலையே இளையன் குடியில் ஒரு தேர்வு மையம், சிவகங்கையில் ஒரு மையமும் என இரு மையங்கள் உள்ள நிலையில் அங்கிருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை தேர்வு மையத்தை தேடிச்சென்றது ஏன்? என தேர்வர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த தேர்வு முறைகேடு நடைபெற்றுள்ளதா? என  டி.என்.பி.எஸ்.சி விசாரணையை தொடங்கிள்ளது, இந்த தேர்வில் முறைகேட்டில் ஈட்டுபட்டு குரூப் 4 தேர்வு முடிவில் அதிக மதிப்பெண் பெற்ற கருப்பு ஆடுகள் பெரும் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி நடத்தி வரும் விசாரணையில் பலரும் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

டி.என்.பி.எஸ்.சி யின் விசாரணைக்கு பயந்து திருவராஜ் தலைமறைவாகி விட்ட நிலையில், திருவராஜ் தேர்வு எழுதிய மையத்தில் தேர்வு எழுதி, அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வானவர்களை, சென்னைக்கு அழைத்து விசாரிக்க, டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது, இதனால் முறைகேட்டு புகாரில் தொடர்புடையவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் குரூப் 2 A தேர்விலும் முறைகேடாக தேர்வு எழுதி 35 இடங்களை பிடித்து அந்த 35 பேரும் தற்போது அரசு பணிகளில் சேர்ந்து ஒரு வருடம் அரசு சம்பளமும் பெற்று விட்ட நிலையில் அந்த தேர்வில் முறைகேடு செய்தவர்களையும் உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

group 4 exam investigate by tnpsc


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->