கல்லூரி தேர்வுகள் குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.! தேர்வுகளை நடத்தியே தீர்வோம்: யுஜிசி .!  - Seithipunal
Seithipunal


கொரோனா பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு கல்லூரிகளில் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகின் விசாரணை இன்று நடைபெற்றது, அப்போது, யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார், செமஸ்டர் தேர்வுகளை நடத்தியே தீரவேண்டும் என்கிற நிலைப்பாட்டில் யுஜிசி உறுதியாக உள்ளதாக தெரிவித்தார். பல்கலைக்கழக கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு குறித்து முடிவெடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் கல்லூரி படிப்புகளை முடித்தவர்களுக்கு பட்டங்கள் வழங்குவதற்கான விதிகளை யுஜிசி  மட்டுமே தீர்மானிக்க முடியும் மாநில அரசுகளால் இந்த விதிகளை மாற்றி அமைக்க முடியாது என தெரிவித்தார்.

மேலும், தேர்தவை நடத்தாமல் இருப்பது மாணவர்களுக்கு நன்மை தரும் முடிவு அல்ல என துஷார் மேத்தா வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

final semester exam not cancel


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->