வேலைதேடும் இளைஞர்கள் கவனத்திற்கு... கள்ளக்குறிச்சியில் 16ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்... மிஸ் பண்ணிடாதீங்க...! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகின்ற 16ஆம் தேதி காலை 10 மணி அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமை தனியார்துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 

எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த சிறு, குறு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும்.

தமிழகம் முழுவதும் உள்ள பிரபல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது பணிக்காலியிடம் மற்றும் கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வு தேர்வு செய்ய உள்ளனர்.

கல்வி தகுதி:

•10-ம் வகுப்பு,

•12-ம் வகுப்பு,

•ஐ.டி.ஐ,

•டிப்ளமோ,

•பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம். 

மேலும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்ப டமாட்டாது. 

எனவே தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும், தனியார்த்துறை நிறுவனங்களும் வருகிற 16- ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை அருகில் உள்ள டேனிஷ் மிஷன் நகர தொடக்கப்பள்ளியில் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Employment camp on June 16th in kallakurichi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->