சென்னை இஎஸ்ஐசி மருத்துவ கல்லூரியில் 62 காலி பணியிடங்களுக்கு நேரடி முறையில் ஆள் சேர்ப்பு! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள மூன்று இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு சீனியர் ரெசிடென்ட், சிறார் மருத்துவ உளவியலாளர், துணை பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு நேரடி முறையில் ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது. அனைத்து பணியிடங்களும் நேர்காணல் மூலம் நியமனம் செய்யப்படுகிறது. நேர்காலங்களில் பங்கேற்போர் அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீனியர் ரெசிடென்ட் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் எம்டி/எம்எஸ்/ டிஎன்பி போன்ற மருத்துவ படிப்புகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01/01/2023 நாள் படி 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இவர்களின் பணிக்காலம் 3 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச சம்பளம் ரூ.1,40,326 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறார் உளவியலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். உளவியல் பாட நெறியியல் எம்ஏ/எம்எஸ்சி முதுநிலை பட்டப்படிப்புடன் மருத்துவ முறை உளவியல் பாடநெறி ஆய்வு (M.Phil) முடித்திருக்க வேண்டும். இவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.47,838 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உதவி பேராசிரியர்கள் நேர்காணின் போது 67 வயதை பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது. இவர்களுக்கான பதவிக்காலம் 3 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.  

மேலும் விவரங்களுக்கு இங்கே 👉 கிளிக் செய்யவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Direct recruitment for 62 vacancies in ESIC Hospital Chennai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->