மாதம் 8000 உதவித்தொகையுடன் டிப்ளமோ படிப்பு - எப்படி விண்ணப்பிப்பது? - Seithipunal
Seithipunal


சென்னையில் இயங்கி வரும் தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தில் இரண்டு ஆண்டு கால தொல்லியல், கல்வெட்டியல் மற்றும் மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியகவியல் முதுகலை டிப்ளமா உள்ளிட்ட படிப்புகளும், ஓராண்டு கால சுவடியியல் முதுகலை டிப்ளமா படிப்பும் வழங்கப்படுகின்றன.

இந்தப் படிப்புக்கு தொல்லியல் படிப்பில் ஏதேனும் ஒரு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்களும், கல்வெட்டியல் படிப்பில் தமிழ், இந்திய வரலாறு, பண்டைய வரலாறு, தொல்லியல் வரலாறு ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் முதுகலை பட்டம் பெற்றோரும், மரபு மேலாண்மை படிப்பில் பொறியியல் பட்டதாரிகளும், மானுடவியல், சமூகவியல், வேதியியல், இயற்பியல், உயிரியல், நிலத்தியல் இவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.  இதேபோல், சுவடியல் படிப்புக்கு தமிழில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:- நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். 

தேர்வு நாள் :- நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ஜூலை 20-ம் தேதி அன்று நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை தொல்லியல் துறையின் இணையதளத்தில் (www.tnarch.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

மேலும், விண்ணப்பத்தாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து, “ஆணையர், தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை 600 008” என்ற முகவரிக்கு ஜூலை மாதம் 14-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

குறிப்பாக இந்த முதுகலை டிப்ளமா படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.8,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்தப் படிப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய 044 – 2819 0023 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

diplomo Archaeology pg course application open


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->