சாதனைப் பாதையில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகள்! - 92.96 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று அசத்தல்...! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டதாவது,"பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 35 மேல்நிலைப்பள்ளிகள், இந்தாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வில் சிறப்பான சாதனையை பதிவு செய்து கல்வி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.

2025-2026 கல்வியாண்டில் நடைபெற்ற 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், 2,257 மாணவர்களும் 2,922 மாணவியர்களும் என மொத்தம் 5,179 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 2,028 மாணவர்களும், 2,750 மாணவியர்களும் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த தேர்ச்சி விகிதம் 92.26 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்தாண்டில் பதிவான 88.12 சதவீத தேர்ச்சி விகிதத்தை விட இந்தாண்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பாடவாரியான முழு மதிப்பெண் சாதனைகளிலும் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.

கணினி பயன்பாடுகள் பாடத்தில் 8 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 10 பேரும், கணக்குப் பதிவியலில் 8 பேரும், பொருளாதாரத்தில் 2 பேரும், வணிகக் கணிதத்தில் 2 பேரும், அடிப்படை இயந்திரப் பொறியியலில் 2 பேரும், உணவு சேவை மேலாண்மையில் 90 பேரும், நெசவு மற்றும் ஆடை வடிவமைப்பில் 4 பேரும், தணிக்கையியலில் 47 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று கல்விச்சாதனை படைத்துள்ளனர்.

மொத்தமாக 173 மாணவ, மாணவியர் முழு மதிப்பெண் பெற்று கவனம் பெற்றுள்ளனர்.மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் 43 மாணவர்கள் 551 முதல் 600 வரை மதிப்பெண்கள் பெற்று உயர்ந்த நிலையை எட்டியுள்ளனர். மேலும் 241 பேர் 501 முதல் 550 வரையும், 543 பேர் 451 முதல் 500 வரையும் மதிப்பெண்கள் பெற்று திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

மதிப்பெண் தரவரிசையில் புல்லா அவென்யூ சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி 600-க்கு 593 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். எம்.எச். சாலை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 586 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், மார்க்கெட் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 583 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

தொடர்ந்து புல்லா அவென்யூ பள்ளி மாணவிகள் 579 மற்றும் 578 மதிப்பெண்களுடன் நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களையும் தங்கள்வசப்படுத்தியுள்ளனர்.மேலும் நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.ஐ.டி. நகர் சென்னை மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று கல்வித்துறையில் தனித்துவமான முத்திரையை பதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Corporation Schools path success 92point96 percent students passed amazing


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->