பாரம்பரிய உணவுகள் தற்பொழுது ஆன்லைனில்.! மிஸ் பண்ணிடாதீங்க.! - Seithipunal
Seithipunal


இயற்கை உணவின் ஆரோக்கியத்தை பற்றியும், முக்கியத்துவத்தை பற்றியும், கிராமப்புறங்களில் இயற்கை சூழலில் வாழ்ந்த பலருக்கும் தெரிந்திருக்கும். பண்டிகை தினங்கள் வந்துவிட்டால் போதும், நெய்யில் மணமணக்கும் பலகாரங்களின் வாசனை அனைவரின் வீட்டிலேயும் அடிக்கும். அதிலும் அதிரச பிரியர்களுக்காகவே அந்த பண்டிகைகள் வந்துவிட்டதுபோல் அத்தனை சந்தோஷம்.

அரிசி மாவு, நாட்டு வெல்லம் சேர்த்து செக்கு எண்ணெயில் பொரித்த மொறுமொறுப்பான அதிரசத்தை யார் தான் வேண்டாம் என்பார்கள்.

பாட்டி வடை சுட்ட கதையை கற்பித்த நமது தமிழ் சமூகம், இப்போது கற்பித்தலின் சுவையை காது வழியாக மட்டுமே பெற்று, வடையின் சுவையை அறியாது போனது இந்த அவசர உலகம். அவர்களை சொல்லி குற்றமில்லை. கால மாற்றத்தினால் மேலை நாட்டு உணவு மீது அனைவருக்குள்ளும் இருக்கும் மோகம் நமது பாரம்பரிய உணவுகளையும், பண்டங்களையும் மறக்க செய்துவிட்டது.

இன்றைய வாழ்க்கை சூழலில் யாரும் தங்கள் சொந்த ஊர்களில் வேலை செய்வது இல்லை. தங்கள் பிழைப்பிற்காக வேறு மாநிலங்கள், சிலர் வெளிநாடுகளில் கூட வேலை பார்க்கும் நிலை உள்ளது. தங்கள் வீட்டில் அம்மா கையில் செய்த சுவையான பலகாரங்களுக்கு இணையாக இன்று எந்த கடைகளிலும், எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைப்பதில்லை.

'யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும்" என்ற வள்ளுவரின் கூற்றிற்கு ஏற்ப, இப்படி பாரம்பரிய சுவையும், சத்தும் நிறைந்த நமது பண்டங்களை இன்றைய தலைமுறையினருக்கும், வெளிநாட்டு வாழ் மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் சில இளைஞர்களின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது 'நேட்டிவ்ஸ்பெஷல்.காம்" (nativespecial.com)இணையத்தளம்.

சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு சர்க்கரை வியாதி, சிறுவயது முதலே உடல் பருமன் என ஆரோக்கியமற்ற தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் நாம். பணத்தை மூலதனமாக வைத்து தங்கள் ஆரோக்கியத்தில் குறை வைக்கிறார்கள். இயற்கையான உணவு கிடைக்காமல் பாஸ்ட் புட் உண்டு பல நோய்களால் ஆட்கொள்ளப்பட்டு அந்த பணத்தை மருத்துவத்திற்காக செலவிடுவது இன்றளவிலும் நடந்துக்கொண்டிருக்கிறது.

மைதா மற்றும் பல ரசாயனம் கலந்த பிஸ்கட்களுக்கு, பதிலாக 'வெள்ளியணை அதிரசம்" மிகவும் சுவையானது. உடலுக்கு கேடில்லாத உணவு.

நமது நேட்டிவ் ஸ்பெஷல்.காம் இணையதளத்தில் ஆர்டர் செய்வதன் மூலம் உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் நமது பாரம்பரிய பண்டங்கள் உங்களை வந்தடையும். பொருளை பெற்று பணம் செலுத்தும் வசதியும் செய்து தருகிறார்கள்.

நம் பாரம்பரிய பண்டங்களை உண்டு அழியாது பாதுகாப்போம்.! ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்..!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

traditional foods online


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->