'குடும்பம் சேர வேண்டும் என்ற ஆசை'...! - நிறைவேறாத நிலையில் உயிரை மாய்த்த கணவர்...!
desire join family Husband commits suicide when his wish join family not fulfilled
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை காவல் எல்லைக்குட்பட்ட அச்சங்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த வள்ளிநாயகம் (46), குடும்பத்துடன் வாழ்ந்து வந்தவர்.
இவரது மனைவி முருகலட்சுமி (36) மற்றும் சுடலைவடிவு (15), உமா மகேஸ்வரி (11) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தின் பொருளாதார தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு, வள்ளிநாயகம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஸ்வீட் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுமுறைகளில் ஊருக்கு திரும்பியபோது, குடிபோதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவருத்தமடைந்த முருகலட்சுமி, தனது மகள்களுடன் தந்தை வீட்டிற்கு சென்று தங்கியிருந்தார்.
நேற்று சத்தியமங்கலத்தில் இருந்து ஊருக்கு திரும்பிய வள்ளிநாயகம், மது போதையில் மாமனார் வீட்டிற்கு சென்று, மனைவி மற்றும் குழந்தைகளை மீண்டும் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
ஆனால் அவர்கள் வர மறுத்ததால், ஆழ்ந்த மனவேதனையில் சிக்கிய அவர், இரவு நேரத்தில் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, மதுவில் விஷம் கலந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.இன்று காலை அவரது தாயார் சங்கரம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் முற்றத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்த வள்ளிநாயகத்தை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.
உடனடியாக தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், உடலை கைப்பற்றி விசாரணை நடவடிக்கைகளை தொடங்கினர்.
தற்போது அவரது உடல் கோவில்பட்டி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த துயர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவலர்கள் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
desire join family Husband commits suicide when his wish join family not fulfilled