யோகிபாபுவை ஒருதலையாக காதலித்த நடிகை! கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ!! - Seithipunal
Seithipunal


மீபத்தில் நடிகர் யோகிபாபு கோவிலில் அவரது உறவினர் பெண்ணுடன் திருமணம் நடைபெற்று அந்தப் புகைப்படம் வைரலாகி வந்தது. இந்த நிலையில் யோகி பாபுவை ஒரு தலையாக காதலிப்பதாக கூறி துணை நடிகை ஒருவர் டிக்டாக்கில் அவரது சோகத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

டிக் டாக்கில் யோகிபாபுவின் காதலியாக வரும் அவர், யோகியின் புகைப்படத்தை பேக்ரவுண்ட் ஆக வைத்துக்கொண்டு பாடல்களை பாடி வீடியோவை வெளியிட்டு வந்துள்ளார். மேலும் யோகிபாபு உடன் அவர் எப்போதோ எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது முகப்பு பக்கத்தில் வைத்துள்ளார்.

யோகிபாபுவை காதலிப்பதாகவும் அவருக்கு திருமணம் ஆனதால் மிகவும் சோகத்தில் இருப்பது போலவும் அவர் பீலிங்கா டிக்டாக்கில் பாடல்களை பாடிக்கொண்டு வீடியோக்களை வெளியிட்டு வந்து கொண்டுள்ளார். 

இந்த வீடியோகளுக்கும் லைக்குகள் குவிந்து கொண்டு வருகிறது. அண்மையில் போன காதலர் தினத்தன்றும் யோகிபாபுவின் புகைப்படத்தை வைத்து காதல் வசனம் பேசி வீடியோக்களை பதிவிட்டு இருந்தார். 

இதுகுறித்து அந்த துணை நடிகையிடம் விசாரித்தபோது, அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், பட வாய்ப்புகள் இல்லாததால் அனைவரையும் அவர் பக்கம் திருப்பவே இவ்வாறு செய்ததாகவும் கூறியிருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yogi babu one side lover tik tok


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->