பெண்ணின் தற்கொலை வழக்கில் கைதான புஷ்பா பட நடிகர்! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த திரைப்படம் வட மாநிலங்களில் பெரும் வெற்றி படமாக அமைந்து படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் புகழ் பெற்றது. 

தற்போது 'புஷ்பா 2' திரைப்படத்தின் படபிடிப்பு நடைபெற்று வருகிறது. புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு நண்பராக கேசவா என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஜெகதீஷ் பிரதாப் நடித்திருந்தார். 

பாராட்டுகளை பெற்றதுடன் ரசிகர்களிடையே நல்ல வரவைப் பெற்ற இவர் தற்போது 'புஷ்பா 2' திரைப்படத்திலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில் இளம் நடிகை ஒருவர் ஜெகதீஷ் பிரதாப் கொடுத்த தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்ததால் ஜெகதீஷ் கடந்த ஒரு வாரமாக தலைமறைவாக இருந்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து ஜெகதீஷ் பிரதாப் நேற்று காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட பெண்ணுடன் ஜெகதீஷ் லிவ் இன் உறவில் இருந்ததாகவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. 

இந்த நடவடிக்கை தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman suicide case arrested Pushpa movie actor


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->