ரசிகர்களுக்கு எச்சரிக்கை ! இது தியேட்டர் அல்ல ...ஒழுங்கா நடந்துக்கோங்க....! - அஜித் குமார் - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் ‘தல’ என்ற பெயரால் ரசிகர்களின் இதயத்தில் ஆட்சி செய்யும் அஜித் குமார், தற்போது வெள்ளித்திரையை தாண்டி வேகத்தின் உலகில் தனது முத்திரையை பதித்து வருகிறார். ரேசராகவும் தன்னை நிரூபித்து வரும் அவர், கடந்த சில மாதங்களாக அபுதாபியை தளமாக கொண்டு சர்வதேச கார் பந்தயங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

‘Ajith Kumar Racing’ என்ற சொந்த ரேசிங் அணியை உருவாக்கி, துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு வெற்றிகளையும் பரிசுகளையும் கைப்பற்றி, இந்திய ரசிகர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

வெளிநாட்டில் தங்கி இருக்கும் அஜித்தை சந்திக்க நடிகர்கள் சிம்பு, பிரசன்னா, இயக்குநர் விக்னேஷ் சிவன்  மாதவன், சிவகார்த்திகேயன், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகை நயன்தாரா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்தி பேசியது குறிப்பிடத்தக்கது.

அஜித் முதல் முறையாக ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலும் பெரும் கவனம் பெற்றது. அவரின் ரேசிங் தருணங்களின் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், அபுதாபியின் புகழ்பெற்ற யாஸ் மெரினா சர்க்யூட்டில் நடைபெற்ற சமீபத்திய கார் ரேசில் அஜித் பங்கேற்ற போது ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. அதில் ரசிகர்கள் அதிகமாக கூடி ஆரவாரம் செய்ததால், பாதுகாப்பை முன்னிட்டு அஜித்,“ப்ளீஸ்… ஒழுங்கா நடந்துக்கங்க… இது தியேட்டர் கிடையாது…” என்று கடுமையாக எச்சரிக்கும் காட்சி ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Warning fans This not theater behave properly Ajith Kumar


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->