'ரஞ்சிதமே' பாடல் காப்பியா? செய்தியாளர் கேள்விக்கு பாடலாசிரியர் விவேக் கொடுத்த பதில்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்திற்கு தமன் இசையமைக்க தில் ராஜு தயாரிக்கிறார். இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். 

இந்த திரைப்படத்தில் சரத்குமார், நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் பாடியுள்ள 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' எனத் தொடங்கும் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகியது. 

ஏற்கெனவே, வெளியான 'உளவாளி' திரைப்படத்தில் இடம்பெற்ற 'மொச்சைக் கெட்ட பல்லழகி' எனும் பாடலின் காப்பி என்று மீம்ஸ்கள் பல வெளிவந்தன. ஆனால், இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில், இதுகுறித்து பாடலாசியர் விவேக் சமீபத்தில் அளித்த பேட்டியில், "அந்த திரைப்பாடலுக்கான கிரெடிட்டை ஏற்கனவே படத்தில் கொடுத்துள்ளோம் என கூறியுள்ளார். ஏற்கனவே இதே மெட்டில், சில பாடல்கள் வெளியாகியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vivek about ranjidhame song


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->