10 வருடங்களுக்கு பின் உருவாகும் விமல் திரைப்படத்தின் 2-ஆம் பாகம்! - Seithipunal
Seithipunal


எழில் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தேசிங்குராஜா'. இந்த திரைப்படத்தில் விமல், பிந்து மாதவி, ரவி, மரியா, சிங்கம் புலி, சூரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

காமெடி படமாக உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த திரைப்படத்தில் நடிகர் விமல் , ஜனா, புஜிதா, பொன்னாடா ஹர்ஷிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவிமரியா, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா ஆகியோர் நடக்கின்றனர். 

இந்த திரைப்படத்தை பி.ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். வித்யாசாகர் இசையமைத்துள்ளார். கல்லூரியில் படிக்கும் நண்பர்களின் கதையைமயமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தின் படபிடிப்பு தொடங்கியுள்ளதாகவும் மே மாதம் வெளியிடப்பட குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vimal movie update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->