வைரலாகும் விக்ரம் பட புதிய போஸ்டர்.. மிரட்டலாக இருக்கே.. செம சூப்பர்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில், ஷிவானி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

இந்த படத்தின் 'பத்தல..பத்தல' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில், இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியாகியது. தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், தற்பொழுது விக்ரம் படத்தின் சென்சார் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தின் மொத்த ஒளிபரப்பு நேரம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vikram new poster viral on twitter 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->